Friday, November 28, 2008

நொடிக் கவிதைகள்.....!


காத்திருப்பேன் உனது வழியில்,
வந்துவிடடி நெஞ்சமோ வலியில்.!

பேசிக்கொள்ளலாம்,
பேசாமல் கொல்லாதே..!

மனதை இழந்தேன் கள்ளியின்பால்,
நீ இல்லையேல் உள்ளதடி கள்ளியின் பால்..!

உன் பிரிவால் நெஞ்சில் மா ரணம்,
இனியும் தொடர்ந்தால் உறுதி என் மரணம்..!

காதலைச் சொல்லவா ரத்தத்தைச் சிந்தி,
பைத்தியமாய் இருக்கிறேனே கொஞ்சமாவது சிந்தி..!


நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:

கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.

23 comments:

முரளிகண்ணன் said...

ரசனையாக ரகளையாக இருக்கின்றன இந்த குறும்பாக்கள் ('குறும்பு" பாக்கள்)

அன்புடன் அருணா said...

புது உத்தியாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது.
அன்புடன் அருணா

திகழ்மிளிர் said...

அருமையான வரிகள்
அழகுத்தமிழில் மீண்டும் மீண்டும்

இதைப் படித்துப் பாருங்கள்


நாடோடி இலக்கியனின் "உஷார் காதல்...!"

நாடோடி இலக்கியன் said...

முரளிகண்ணன் said...
//ரசனையாக ரகளையாக இருக்கின்றன இந்த குறும்பாக்கள் ('குறும்பு" பாக்கள்)//

வாங்க முரளி கண்ணன்,
குறும்பாக்கள் விளக்கம் அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

அன்புடன் அருணா said...
//புது உத்தியாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது.
அன்புடன் அருணா//

வாங்க அருணா,
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த பக்கம் வந்திருக்கின்றீர்கள்.
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.
மேலும் இது புது உத்தியா என்பது தெரியவில்லை ,ஆனால் கவிஞர் வாலி அவர்களின் கவிதைகளில் ,வார்த்தைகளை வைத்து நிறைய விளையாடியிருப்பார்.அதன் பாதிப்பாக கூட இருக்கலாம்.

ஸ்ரீமதி said...

நொடியில் படித்து விட்டாலும்.. நெடு நேரம் மனதுக்குள் தங்கியது.. உங்கள் நொடிக்கவிதைகள்... :))அனைத்தும் அருமை.. :))

நாடோடி இலக்கியன் said...

@திகழ்மிளிர்

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.உங்க பெயருக்கு அர்த்தம் என்னங்க, ரொம்ப நாளா உங்ககிட்ட கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக இருக்கிறது...

நாடோடி இலக்கியன் said...

@ ஸ்ரீமதி
வருகைக்கு மிக்க நன்றிங்க.
உங்களுடைய வலைப்பூ வசீகரமாக இருக்கிறது.என்ன டெம்ப்லேட் பயன்படுத்துகிறீர்கள்.

சென்ஷி said...

கவிதைகள் அனைத்தும் கலக்கல்..

அதிலும்,

"பேசிக்கொள்ளலாம்
பேசாமல் கொள்ளாதே"

அசத்தல்!!!

நாடோடி இலக்கியன் said...

@முத்துலெட்சுமி-கயல்விழி
வாருங்கள் முத்துலெட்சுமி-கயல்விழி,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.தொடர்ந்து வாருங்கள்.

நித்யகுமாரன் said...

திரும்ப எதாவது எழுதலாமான்னு நீங்கதான் யோசிக்க வைக்கிறீங்க...

வரிக்கவிதைகள் சிறப்பு...

கலைஞரின் கவிதை(?)கள் அளவு இல்லாவிடினும் அழகே...

அன்பு நித்யகுமாரன்

நாடோடி இலக்கியன் said...

@சென்ஷி
வாங்க சென்ஷி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ஸ்ரீமதி said...

டெம்ப்லேட் கூகிள்ல சர்ச் பண்ணது.. http://www.blogskins.com/tags/lovely/page4/ use this link.. it ll help u i think.. :))

நாடோடி இலக்கியன் said...

@நித்யகுமாரன்
//திரும்ப எதாவது எழுதலாமான்னு நீங்கதான் யோசிக்க வைக்கிறீங்க...//

அப்போ சீக்கிரமா ஒரு பதிவை போடுங்க

//வரிக்கவிதைகள் சிறப்பு...//

உங்களோட
"என்ன பார்வை உன் பார்வை
ஒரு "BAR"வை"யைவிடவா?


//கலைஞரின் கவிதை(?)கள் அளவு இல்லாவிடினும் அழகே...//

????????
:)

நாடோடி இலக்கியன் said...

@ ஸ்ரீமதி
தகவலுக்கு நன்றி சகோதரி.

அமுதா said...

நன்றாக இருக்கிறது

நாடோடி இலக்கியன் said...

@அமுதா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க அமுதா.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

super star

நாடோடி இலக்கியன் said...

@ SUREஷ்,
என்ன சொல்ல வந்தீங்கன்னே புரியல நண்பரே.

:(

சத்ரியன் said...

காதல் " கவிதைகள் மாதிரி " தெரியுதே.

நன்றாக இருக்கிறது.இன்னும் கெஞ்சட்டும் அவளை!

தினேஷ் said...

நல்லா இருக்குங்க..

கொஞ்சம் கவுஜ..

வாந்தி(மட்டையானவர்களுக்கு)-
காத்திருப்பேன் உனது வருகையில்
வந்துவிடு மொத்தமா நொடியில்

வாந்தி எடுக்கவா மொத்தத்தையும் ஏத்தி,
போதையா இருக்கும் கொஞ்சமாவது ஏத்தி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சத்ரியன்,
நன்றி சூரியன்,

அஹா சத்ரியன்,சூரியன் அசத்தல் பெயர்கள் அடுத்தடுத்து வருகை.