Monday, November 24, 2008

கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!

சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!

மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!

ஒரு கணிப்பொறியாளனின் கனவு:

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடையில்
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி
"வா "என்றாள்,
"எங்கே?" என்றேன்,
"சொன்னால்தான் வருவாயோ?"-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக இங்கே
என்பதாய் பார்த்த என்னிடம்,
"இன்னுமாப் புரியவில்லை?" என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர,
விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!


(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)

டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.

12 comments:

Anonymous said...

இந்தக் கவிதையெல்லாம் கமாவெல்லாம் எடுத்துட்டு நெட்டுக்க ஒரே பத்தியா எழுதிப் படிச்சுப் பாருங்க...

அப்ப ஏதானும் தோணுதுங்களா?????

நாடோடி இலக்கியன் said...

வாங்க அனானி நண்பா,
கருத்துக்கு மிக்க நன்றிங்க.வரும் பதிவுகளில் உங்களை திருப்தி படுத்துகிற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.குறையை சுட்டியமைக்கு நன்றி.

அரவிந்த் said...

\\என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது..!\\

Sooppaar!!!!!!!

ச.பிரேம்குமார் said...

என்ன இலக்கியரே, மீள்பதிவு கவிதைகளா இருக்கு? இன்னும் காதலிச்சுகிட்டு இருக்கீங்களோ??

கல்யாணம் ஆன பிறகு காதல் கவிதைகளை காணோமே???

நாடோடி இலக்கியன் said...

பிரேம்குமார் said...
//என்ன இலக்கியரே, மீள்பதிவு கவிதைகளா இருக்கு?//

வாங்க பிரேம்,
முதல் வருகைக்கு நன்றி,
இது ஒன்றுதாங்க மீள்பதிவு.இந்த மாதமே இரண்டு காதல் கவிதைகள்
பதிவு போட்டிருக்கேன்.ஆனால் ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துன மாதிரி யாருமே கண்டுக்கல.. :)

என்னை கேட்குறீங்களே உங்களிடமிருந்து கவிதைகளையே காணோமே.

நாடோடி இலக்கியன் said...

அரவிந்த் said...
\\என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது..!\\

Sooppaar!!!!!!!\\

வாங்க அரவிந்த்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ச.பிரேம்குமார் said...

ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம போயிட்டேன் :(
படிக்கிறேன்

நான் இன்னிக்கு தாங்க ஒரு கவிதை போட்டேன். ஆனா காதல் கவிதை இல்லையே ;)

நாடோடி இலக்கியன் said...

பிரேம்குமார் said... //ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம போயிட்டேன் :(
படிக்கிறேன்//

ஓ,நான் இப்போதுதான் முதன் முறையாக வரிகிறீர்கள் என்று நினைத்தேன்.

//நான் இன்னிக்கு தாங்க ஒரு கவிதை போட்டேன். ஆனா காதல் கவிதை இல்லையே ;)//

அதைவிட நல்ல சேதி சொல்லியிருக்கீங்களே தொடர்ந்து எழுத போவதாக அதுவே கவிதை படிச்ச எஃபெக்ட்லதான் இருக்கு. :)

ச.பிரேம்குமார் said...

உங்க வலைப்பூவுல இப்போதான் முதன்முறையா பின்னூட்டம் இடுகிறேனா???

எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகமுங்க :(

நாடோடி இலக்கியன் said...

பிரேம்குமார் said...
//உங்க வலைப்பூவுல இப்போதான் முதன்முறையா பின்னூட்டம் இடுகிறேனா???

எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகமுங்க :(//

ஆமாம்,இப்போதுதான் பின்னூட்டம் முதன் முறையாக உங்களிடமிருந்து.
"காதல் காலம்" மீண்டும் எப்போது பிரேம், வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

ச.பிரேம்குமார் said...

ஓ சரி சரி! உங்க வலைப்பூ படிச்சிருக்கேன். பின்னூட்டம் இட்டதில்லை போலும்.

இந்த வருடம் காதல் காலம் கொஞ்சம் தோய்வைடைந்தது. அடுத்த பிப்ரவரிக்கு நல்ல படியா வரும்னு நம்புறேன் :)

(அடடே, நம்ம பதிவையையும் ஒருத்தர் நினைவு வச்சிருக்காருப்பா )

நாடோடி இலக்கியன் said...

பிரேம்குமார் said...
//ஓ சரி சரி! உங்க வலைப்பூ படிச்சிருக்கேன். பின்னூட்டம் இட்டதில்லை போலும்.

இந்த வருடம் காதல் காலம் கொஞ்சம் தோய்வைடைந்தது. அடுத்த பிப்ரவரிக்கு நல்ல படியா வரும்னு நம்புறேன் :)

(அடடே, நம்ம பதிவையையும் ஒருத்தர் நினைவு வச்சிருக்காருப்பா )//

என்னங்க பிரேம் இப்படி சொல்லிட்டீங்க,
ஒரே ஃபீலிங்ஸ்ஸா இருக்குங்க.
காதல் காலம் தலைப்பில் முதலில் நானும் கவிதைகள் எழுகிட்டு இருந்தேன்,பிறகு உங்க பதிவிலும் அதே தலைப்பு இருந்ததும் நான் "இது காதல் காலமடி" என்று மாற்றிவிட்டேன்.அதனாலேயே எனக்கு அந்த தலைப்பு மறக்காமல் இருக்கிறது.
:)