அம்மா
எனக்காகத் துடிக்கும்
இன்னொரு இதயம்..!
அண்ணனுக்கு பதினாறு
வயதிருக்கும்போது
என்னை அடித்தான்,
அம்மா சொன்னாள்,
"அடிக்காதே அவன் சிறுபிள்ளையென்று"
இன்றும் என்னை அடிக்க வருகிறான்
இப்போதும் சொல்கிறாள் அதே வார்த்தைகளை,
இன்று எனக்கு வயது பதினாறு...!
டிஸ்கி:இது நான் பள்ளி நாட்களில் எழுதியது...
4 comments:
அம்மாவின் இயல்பு அப்படித்தான்.குழந்தைகள் அம்மாவுக்கு எப்போதும் சிறுவர்கள் தான்.
சாந்தி
வாங்க சாந்தி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.
நாடோடி இலக்கியன் ,.
"அம்மா" கவிதை ...........? படு சுமார்.பள்ளி பிள்ளைகள் எழுதுவது.
எனக்கு பிரசார நெடி/மிகைப்படுத்தல் பயங்கர ஒவ்வாமை.
கவிதைகள்:'என் கனவும் கூட என்னிடம் கடவுச்சொல் கேட்டது" கடைசியில் ஒரு நச். நான் எதிர் பார்க்கவில்லை. நல்லா இருக்கு.தயவுசெய்து சுருக்கமாக எழுதவும்.
பிறகு கதைகள.முதல் ரெண்டு சூப்பர். நல்ல நடை .பாசாங்குத்தனம் இல்லை.பின் வரும் வரிகள் நல்லா இருக்கு.
// படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் அடையாளத்திற்கு விரலை வைத்துக்கொண்டு//
//ஏ சனியனே உன் புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய//
கடைசியாக -
நாங்கதான் உங்க வலைக்கு வந்துட்டு போறோம் .நீங்க கண்டுகிடவே மாட்டுறிங்க.வாங்க வந்து பார்த்து கருத்து சொல்லுங்க.
நாங்களும் எல்லா எழுதறோம் மில்லா! வாழ்த்துங்க இல்ல சாத்துங்க
வாங்க ரவி ஷங்கர்,
அதெப்படி சரியா சொன்னீங்க,பள்ளி மாணவர்கள் எழுவதுபோலிருக்குன்னு, உங்க பின்னுட்டதைப் பார்த்த பிறகு டிஸ்கி போட்டுவிட்டேன்.உண்மையில் அது என் பதினாறாவது வயதில் எழுதியது.
மற்ற கவிதை,சிறுகதை குறித்த கருத்தகளை அந்தந்த பதிவில் போட்டிருந்தால் இன்னொருமுறை தமிழ்மணத்தில் உலாவர வசதியாக இருந்திருக்கும்.
//கடைசியாக -
நாங்கதான் உங்க வலைக்கு வந்துட்டு போறோம் .நீங்க கண்டுகிடவே மாட்டுறிங்க.வாங்க வந்து பார்த்து கருத்து சொல்லுங்க.
நாங்களும் எல்லா எழுதறோம் மில்லா! வாழ்த்துங்க இல்ல சாத்துங்க//
இதோ சாப்பிட போறேன்,வந்து உங்க பதிவை படிக்கிறேன்.
தொடரும் வருகைக்கு நன்றி
Post a Comment