Monday, December 22, 2008

உங்களுக்கு காதல் பிடிக்குமா அப்போ இங்கே வாங்க..

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது நாடகத்தை
பார்த்திருக்கிறாயா..?!

நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!


அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!


உன் அக்காவின் திருமணத்தில்

உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!

”உனக்கு பிடித்த கவிஞர் யார்?” என்றாய்,
உன் அப்பா என்றேன்,
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச்
சிரித்தாயே நினைவிருக்கிறதா?!!

நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு தண்ணீர்
இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!

உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!

ஆளே இல்லாத சாலையிலும்

அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!

கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!

நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!

உன்னை பார்த்துக்

கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடறி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!


அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

கவிதைகளை தனி வலைப் பக்கத்திற்கு நகர்த்திவிட்டதால் அவ்வப்போது பழைய இடுகை தமிழ்மணத்தில் வலம் வரும் ஏற்கனவே படித்தவர்கள் கண்டு கொள்ள வேண்டாம். :))

44 comments:

திகழ்மிளிர் said...

சுவைத்தேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏற்கனவே படிச்சிருக்கேன்.. இப்ப இன்னொருமுறை ரசிச்சாச்சு.. :)

Shakthiprabha said...

//பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது
நாடகத்தை பார்த்திருக்கிறாயா..?!//


//உனக்குப் பிடித்த
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்//

ரசித்தேன்.

முகில் said...

பளிச்!

;)

குடுகுடுப்பை said...

கவிதை நல்லா இருக்கு.முன்னாடியே படிச்சிட்டேன். இப்போ பின்னூட்டம்

பாலராஜன்கீதா said...

படித்தேன் படித் தேன்

கவின் said...

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது
நாடகத்தை பார்த்திருக்கிறாயா..?!

நல்லாதான் காதலிச்சிருக்கிங்க

இரவு கவி said...

i havent read ur poems previously but now i have read all ur poems including old poems. all are very nice. romba romba nalla irunthathu.

Anonymous said...

Nice

பட்டாம்பூச்சி said...

கவிதைகள் மிக அருமை.
முன் அனுபவமான்னு எல்லாம் கேட்க மாட்டோம்ப்பா... :-)

அன்புடன்,
பட்டாம்பூச்சி.

Anonymous said...

மிகவும் அருமை

நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு ந‌ல்ல‌ க‌விதை விருந்து

வாழ்த்துக்க‌ள்

வெற்றிவேல்.ச‌

நாடோடி இலக்கியன் said...

@வாங்க திகழ்மிளிர்,
சுவைத்ததற்கு நன்றி.

ஆமாம் உங்க பெயருக்கு என்னங்க அர்த்தம் இதற்கு முன் ஒரு மறுமொழியில் கூட வினவியிருந்தேன்,சொல்லவே இல்லையே :((


@முத்துலெட்சுமி-கயல்விழி,

வாங்க சகோதரி,
ஏற்கனவே இந்த கவிதைகளை படித்திருக்கின்றீர்களா,அப்போதே பின்னூட்டம் போட்டிருந்தா இப்படி மறுபடியும் இம்சை பண்ணியிருக்கமாட்டேனே :)
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

@வாங்க சக்திபிரபா,

முதல் வருகைக்கும் ,கவிதைகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றிங்க.

@ முகில்,

முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.


@ குடுகுடுப்பை,

இப்போதான் நீ யாருன்னு தெரிஞ்சிபோச்சே,ஆக்சுவலா ஸ்காலர்ஷிப் மேட்டர் படிச்சப்போ உன்னோட நினைவுதான் வந்தது,ஆனா நீதான்னு தெரியல.:)

நாடோடி இலக்கியன் said...

@பாலராஜன்கீதா,

ரசித்தேன் உங்க பின்னூட்டத்தை.வருகைக்கு மிக்க நன்றிங்க.

@கவின் ,

ஹா ஹா ஹா வாங்க கவின்,காதலிச்சாதான் கவிதை வருமா என்ன? எல்லாம் இமேஜின் ஹார்ஸ்தான்.:))

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

@இரவு கவி,

வாங்க இரவுகவி,
என்னுடைய பழைய கவிதைகள் உட்பட அனைத்து கவிதைகளையும் படித்து நன்றாக இருப்பதாய் சொன்னதற்கு ஒரு பெரிய நன்றி.ஆமா நெசமாத்தானே சொல்றீங்க?

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

@ Anonymous

வாங்க அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.அப்படியே பேரை சொல்லிட்டு போகலாமே நண்பா.

நாடோடி இலக்கியன் said...

@பட்டாம் பூச்சி,

வாங்க பட்டாம் பூச்சி,
ஆஹா ஏங்க இப்படி பீதிய கிளப்புறீங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.


@வெற்றிவேல்.ச‌
வாங்க வெற்றி,
முதல் வருகைக்கும்,உற்சாகமூட்டும் பின்னூட்டத்தற்கும் மிக்க நன்றிங்க.

பிரியமுடன் பிரபு said...

கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!

/////////


நல்லாயிருக்கு

அன்புடன் அருணா said...

உண்மைதான் ...வலைப்பூ ஆரம்பித்த காலங்களில் பதிவுகள் கவனிப்பாரின்றிப் போயிருக்கும்....மீள்பதிவுகள் தேவைதான்.நல்ல கவிதை.அன்புடன் அருணா

நாடோடி இலக்கியன் said...

@ பிரபு,
வாங்க பிரபு,
கவிதையை ரசித்தமைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

@அருணா,
வாங்க அருணா,
இந்த கவிதகளையெல்லாம் என்னுடைய கல்லூரி நாட்களில் எழுதியது அப்போது எனது நண்பர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது,ஆனால் வலையேற்றிய போது அவ்வளவாக கவனிக்கப் படவில்லை,எனவே மறுபடி மீள் பதிவு செய்தால் இந்த கவிதைகளின் தரம் வரும் பின்னூட்டங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் எனக் கருதியே இந்த மீள்பதிவு.இப்போது மனம் நிறைவாக இருக்கிறது.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திகட்ட திகட்ட காதல் ரசனைக் கவிதைகள்//
கவிதைகள் பிடித்தது.

thevanmayam said...

நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!///

உன்னிப்பா கவனிச்சிருக்கிங்க!!!

தேவா.

நாடோடி இலக்கியன் said...

@அமிர்தவர்ஷினி அம்மா,
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க

நாடோடி இலக்கியன் said...

@thevanmayam
வாங்க தேவா,
நீங்களும் கவிதையை ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க, ஏனெனில் நீங்க குறிப்பிட்டு சொன்ன கவிதைதான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்,அதை காட்சி படுத்தி பார்த்தால் நம்மையுமறியாமல் ஒரு சின்ன புன்னகையை களவாடிச் செல்லும் இயல்பு இந்த கவிதைக்கு இருக்கிறது.

முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

supersubra said...

உலகம் உள்ள வரை காதல் இயங்கும்
காதல் உள்ளவரை இந்த உலகம் இயங்கும்

காதலை வாழ்க்கை முழுவதும் காதலியுங்கள்.

கவிதைகள் உள்ளத்தின் உணர்ச்சிகளாய் இருப்பதால்
என்றும் எப்பொழுதும் இரசிக்க முடிகிறது.
வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

//பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது
நாடகத்தை பார்த்திருக்கிறாயா..?!//

இல்லை.... காரணம் ஆற்காட்டார்... அவர் தானே மின்தடை அமைச்சர்.. ;)))

ஸ்ரீமதி said...

//நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!//

அச்சச்சோ அப்படியா?? (இது அந்த பொண்ணோட பதில்.. என்னுது இல்ல.. ;)))

ஸ்ரீமதி said...

//உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!//

நான் இன்னும் ஓட்டே போடலியே.. அப்ப இதுகென்ன அர்த்தம்??

ஸ்ரீமதி said...

//அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!//

அவங்க தாவணிய பத்திரமா எடுத்துட்டு போயிட்டாங்க.. அப்ப நீங்க?? ;))

ஸ்ரீமதி said...

//உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!//

ஏன் எல்லா கல்யாணத்துக்கும் நீங்க தான் நாள் குறிச்சு தருவீங்களா??

ஸ்ரீமதி said...

//நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!//

கண்டிப்பா மாட்டாங்க.. ஏன்னா உங்க அம்மா வெக்கற வத்தகுழம்பு தான் நல்லாருக்காம்... இதையும் நான் சொல்லல அந்த பொண்ணுதான் சொன்னா.. ;))

ஸ்ரீமதி said...

//உனக்கு பிடித்த
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!//

நீங்க அவங்க அக்காவுக்காகதான் அப்படி சொன்னீங்கன்னு இன்னுமா அந்த பொண்ணுக்கு புரியல?? ;))

ஸ்ரீமதி said...

//உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!//

ஏன் அவங்க எப்பப்பாரு எதாவது சாப்ட்டுகிட்டே இருப்பாங்களா??

ஸ்ரீமதி said...

//ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!//

அவங்க வீட்டு தபால்காரரா நீங்க?? ;))

ஸ்ரீமதி said...

//நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!//

இது ரொம்ப அழகு :))

ஸ்ரீமதி said...

//கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!//

இந்த கோலத்துக்கு அந்த கோலம் எவ்ளவோ பரவால்லன்னு சொல்லுங்க.. ;))

ஸ்ரீமதி said...

//உன்னை பார்த்துக்
கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!//

அத செஞ்சு தானே ஆள் அல்ரெடி கவுந்து கிடக்கிறார் அப்பறம் என்ன??

ஸ்ரீமதி said...

//அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!//

நினைவிருக்கு.. இந்த கவிதைய அல்ரெடி படிச்ச நினைவிருக்குன்னு சொன்னேன்..

ஸ்ரீமதி said...

me the 40 :):)

ஸ்ரீமதி said...

அண்ணா ரொம்ப கும்மிட்டனா?? நல்லா இருந்தது கவிதை எல்லாமே.. ஆனா, பின்னூட்டம் வரலைன்னு வருத்தப்பட்டீங்களா அதான் இப்படி.. :)))))

நாடோடி இலக்கியன் said...

@ சூப்பர் சுப்ரா,
வாங்க சூப்பர் சுப்ரா,
முதல் வருகைக்கும்,அட்டகாசமான பின்னூட்டத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி
//இல்லை.... காரணம் ஆற்காட்டார்... அவர் தானே மின்தடை அமைச்சர்.. ;)))//

குட் டைமிங்.

//அச்சச்சோ அப்படியா?? (இது அந்த பொண்ணோட பதில்.. என்னுது இல்ல.. ;)))//

நம்பிட்டேன்,எப்போ அந்த பொண்ணும் நீங்களும் பிரண்ட்ஸ் ஆனீங்க.உங்க மூலமா தூது விட்டிருப்பேனே.:)))


//நான் இன்னும் ஓட்டே போடலியே.. அப்ப இதுகென்ன அர்த்தம்??//

இதையும் நம்பிட்டேன்,கண்டிப்பா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் அண்ணன் வாங்கி தரேன் சரியா .

//அவங்க தாவணிய பத்திரமா எடுத்துட்டு போயிட்டாங்க.. அப்ப நீங்க?? ;))//

இப்போதானே குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தந்தேன்,சமத்தா அதை சாப்பிடனும், இப்படி வயசுக்கு மீறின கேள்வியெல்லாம் கேட்க கூடாது.

//ஏன் எல்லா கல்யாணத்துக்கும் நீங்க தான் நாள் குறிச்சு தருவீங்களா??//


இதுகூட தெரியாதா, ஆமா இதெல்லாம் நீ கேக்குறத பார்த்தா .... சரி சரி நானே உனக்கும் குறிச்சு கொடுத்துடுறேன். அண்ணன விட்டு ஒரு கல்யாணமா .......

//கண்டிப்பா மாட்டாங்க.. ஏன்னா உங்க அம்மா வெக்கற வத்தகுழம்பு தான் நல்லாருக்காம்... இதையும் நான் சொல்லல அந்த பொண்ணுதான் சொன்னா.. ;))//

வரட்டும் அவ, எல்லாத்தையும் சொல்லிட்டாளா.

//நீங்க அவங்க அக்காவுக்காகதான் அப்படி சொன்னீங்கன்னு இன்னுமா அந்த பொண்ணுக்கு புரியல?? ;))//


எப்படி புரியும் உன்னோட ப்ரண்டாச்சே. :)

//ஏன் அவங்க எப்பப்பாரு எதாவது சாப்ட்டுகிட்டே இருப்பாங்களா??//


தன்னை போல பிறரையும் எண்ணுங்கிறத இந்த இடத்திலயெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது.

//அவங்க வீட்டு தபால்காரரா நீங்க?? ;))//

உங்க ஊரிலெல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தபால்காரர் இருப்பாரா? பார்ரா....

//இந்த கோலத்துக்கு அந்த கோலம் எவ்ளவோ பரவால்லன்னு சொல்லுங்க.. //

அதான் சொல்லிட்டேனே தன்னை போல பிறரையும் ........

//இது ரொம்ப அழகு :))//

இதுக்கு மட்டும் ரிப்பிட்டே சொல்லிக்கிறேன்.

//அத செஞ்சு தானே ஆள் அல்ரெடி கவுந்து கிடக்கிறார் அப்பறம் என்ன??//

:)

//நினைவிருக்கு.. இந்த கவிதைய அல்ரெடி படிச்ச நினைவிருக்குன்னு சொன்னேன்..//

நானும் இனி நினைவில் வைத்திருக்கிறேன், இந்த கவிதையை ஆல்ரெடி நீங்க படிச்சிட்டீங்கன்னு நினைவில் வைத்திருக்கிறேன்ன்னு சொன்னேன். :)

நாடோடி இலக்கியன் said...

@ ஸ்ரீமதி

//அண்ணா ரொம்ப கும்மிட்டனா?? //
எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா.

//நல்லா இருந்தது கவிதை எல்லாமே..//

இது எதுக்கு,நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு.

//ஆனா, பின்னூட்டம் வரலைன்னு வருத்தப்பட்டீங்களா அதான் இப்படி.. //
:((

ஒவ்வொரு கமெண்ட்டையும் ரசிச்சு சிரிச்சேன் ஸ்ரீமதி ,இதே போல குடுகுடுப்பை அவர்கள் இதே கவிதைகளுக்கு எதிர் கவுஜ போட்டிருக்காரு அதையும் படிச்சு பாருங்க .

http://kudukuduppai.blogspot.com/2008/12/blog-post_27.html

தமிழ்ப்பறவை said...

//உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!
//
//நிறைகுடமும் ....
....
....
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன், //
ரசித்தேன்...
படிக்கும்போதே புன்னகையும் ஒட்டிக் கொண்டது...நல்லவேளை மீள்பதிவிட்டீர்கள்..