Monday, March 17, 2008

நொடிக் கவிதைகள்..!


உன்னைப் பிடிச்சிருக்கு
என்னைப் பிடிச்சு இறுக்கு..!

கற்கண்டாய் நீ
உன்னைக் 
கண்டு கல்லாய் நான்..!

நீ எனக்கு பூபாளம்
நானுனக்கு பூபாலம்..!

நமக்குள் வேண்டாம் இனி
நீ, நான் அடையாளம்
எனக்குள் சென்று நீ 
அடை ஆழம்..!

நித்தமும் தெரிகிறாய் புதியதாய்
மொத்தமாய் எனக்கு நீ புதிய தாய்..!

27 comments:

நிலாரசிகன் said...

மொத்தமாய் நீ என் புதிய தாய்.
இவ்வரிகள் மிக அருமை.

அந்த "வாய்தா" கவிதை மட்டும் நெருடல்.

மற்றபடி காதல்,தேனாக வழிகிறது. வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

நிலாரசிகன் said...
//மொத்தமாய் நீ என் புதிய தாய்.
இவ்வரிகள் மிக அருமை.

அந்த "வாய்தா" கவிதை மட்டும் நெருடல்.
மற்றபடி காதல்,தேனாக வழிகிறது. வாழ்த்துக்கள்.//

வாங்க நிலாரசிகன்,
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
///அந்த "வாய்தா" கவிதை மட்டும் நெருடல்.
//
உங்களுக்கு அந்த கவிதை நெருடலாகத் தெரிந்ததால்,அதை நீக்கிவிட்டேன் நண்பரே.

Naresh Kumar said...

மொத்தமாய் நீ என் புதிய தாய்!

கவிதை மிக அருமை!
தொடரட்டும் உங்கள் காதல்!

ஸ்ரீ said...

அடையாளக் கவிதை அட்ராசிட்டி:)). சூப்பரோ சூப்பர். தொடர்ந்து ஒரு நொடிக்கவிதைகள் வெளியிடவும்.

நாடோடி இலக்கியன் said...

Naresh Kumar said...
//மொத்தமாய் நீ என் புதிய தாய்!

கவிதை மிக அருமை!
தொடரட்டும் உங்கள் காதல்!//

வாங்க நரேஷ்,
உங்களின் தொடரும் வாசிப்பிற்கு மிக்க நன்றி.என்னுடைய மற்ற நண்பர்களும் கூட அந்த கவிதையை வெகுவாக ரசித்ததாக கூறினார்கள்.

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீ said...
//அடையாளக் கவிதை அட்ராசிட்டி:)). சூப்பரோ சூப்பர்.
//

மிக்க நன்றி ஸ்ரீ,

//தொடர்ந்து ஒரு நொடிக்கவிதைகள் வெளியிடவும்//

முயற்சி பண்றேங்க.

எழில்பாரதி said...

கவிதைகள் அருமை!!!

நித்தமும் தெரிகிறாய் புதிதாய்
மொத்தமாய் எனக்கு நீ தாய்!!!

இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்!!

வாழ்த்துகள்!!!

நாடோடி இலக்கியன் said...

எழில்பாரதி said...
//கவிதைகள் அருமை!!!
நித்தமும் தெரிகிறாய் புதிதாய்
மொத்தமாய் எனக்கு நீ தாய்!!!
இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்!!

வாழ்த்துகள்!!!//

வாங்க எழில்பாரதி,
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

திகழ்மிளிர் said...

/நித்தமும் தெரிகிறாய் புதிதாய்
மொத்தமாய் எனக்கு நீ தாய்!!!/

அருமையான வரிகள்

Dreamzz said...

aththanaiyum arumai :)

நாடோடி இலக்கியன் said...

திகழ்மிளிர் said...
//
/நித்தமும் தெரிகிறாய் புதிதாய்
மொத்தமாய் எனக்கு நீ தாய்!!!/

அருமையான வரிகள்//

வாங்க திகழ்மிளிர்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..!

நாடோடி இலக்கியன் said...

Dreamzz said...
//aththanaiyum arumai :)//

வாங்க Dreamzz,
முதல் வருகைக்கும்,உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..!

Divya said...

\\மொத்தமாய் நீ என் புதிய தாய்.\

மிக மிக அழகான வரி!!

வாழ்த்துக்கள்!!

நளாயினி said...

oo! nice-

நாடோடி இலக்கியன் said...

வாங்க திவ்யா,
Divya said...
//
\\மொத்தமாய் நீ என் புதிய தாய்.\

மிக மிக அழகான வரி!!

வாழ்த்துக்கள்!!//

தொடர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.
எல்லோருக்கும் அந்த "புதிய தாய்" கவிதை ரொம்ப பிடிச்சு போயிருக்கு,நான் எல்லொருக்கும் பிடிக்கும்னு நெனச்ச கவிதைய யாருமே சுட்டிக் காட்டவில்லை.
:)

நாடோடி இலக்கியன் said...

நளாயினி said...
//
oo! nice-

//

வாங்க நளாயினி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க...!

swapna said...

very nice one

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஸ்வப்னா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க...!

நவீன் ப்ரகாஷ் said...

//உன்னைக் பிடிச்சிருக்கு
என்னை பிடிச்சு இறுக்கு...//

:))))))))

காதலும் குறும்பும்
ஆனந்தக் கூத்தாடுகிறது நடோடி...

நாடோடி இலக்கியன் said...

நவீன் ப்ரகாஷ் said...
//:))))))))

காதலும் குறும்பும்
ஆனந்தக் கூத்தாடுகிறது நடோடி...//

வாங்க நவீன் பிரகாஷ்,
காதலுக்கு ஊடலும்,குறும்பும் இரட்டை குழந்தைகள் மாதிரி இல்லையா, நான் எனது கவிதைகளுக்காக குறும்புக் குழந்தையை தத்தெடுத்திருக்கிறேன்.:)
வருகைக்கு மிக்க நன்றிங்க.

தமிழ்குட்டி said...

உங்கள் கவிதைகள் படிக்க ஒரு நொடி தான்! ஆனால் சிந்தனையில் பல மணி நேரங்கள் தங்கி விடுகிறது.

நாடோடி இலக்கியன் said...

@தமிழ்குட்டி
வாங்க தமிழ்குட்டி,
நெசமாத்தான் சொல்றீங்களா?
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

selventhiran said...

வெயிலான்கிட்ட ஒரு மருந்து இருக்கு... பாலில் கலந்து குடிச்சீங்கண்ணா ஒரு ராத்திரில சரியாகக் கூடிய பிரச்சனைதான் இது!

Raju said...

நண்பர் ஒருத்தரு, நீங்க எப்ப கவிதைகள் போடுவீங்கன்னு காத்துக்கிட்டே இருந்தாப்ல.
கவிதைகள் அருமை.
:)

☼ வெயிலான் said...

செல்வா,

இங்குமா?

நாடோடி,

குசும்பன்ட்ட சொல்லியிருக்கேன் நீங்க கவிதை எழுதியிருக்கிற விசயத்தை :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி செல்வா,(நான் தான் இப்போ எதார்த்தத்திற்கு வந்துவிட்டேனே,இது ரொம்ப பழைய இடுகை).

நன்றி டக்ளஸ்,(இது பழைய இடுகை).

நன்றி வெயிலான்,(ஏ.இ.கொ.வெ)

துபாய் ராஜா said...

வித்யாசமான முயற்சி தொடரட்டும்.