Tuesday, March 11, 2008

பள்ளித் தோழியே....!

பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு
பார்க்கலாமேன்னு.....

பதின்ம வயதின்
பருவ செழிப்பில்;
பார்த்து ரசித்த
பள்ளித் தோழி
நினைவில் பசுமையாய்
எதிரில் பருமனாய்..!
****************************
பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!
****************************
வெட்கமென்றால் என்ன?
எனக் கேட்ட
இன்னொருத் தோழி,
பார்த்த மாத்திரத்தில்
வெட்கப்பட்டாள்,
தன் இரட்டை குழந்தையோடு
சென்றுகொண்டிருக்கையில்..!
*********************************
பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே எதுவுமில்லாததாய்..!

4 comments:

தஞ்சாவூரான் said...

இலக்கியன்,

எத்தனையோ பேரு கவுஜன்னுட்டு மொக்கையைப் போடும்போது, நீங்க நல்ல கவிதைய மொக்கைன்னு சொல்லிட்டீங்களே?

மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

நாடோடி இலக்கியன் said...

வாங்க தஞ்சாவூரான்,
ரொம்ப நன்றிங்க..!
நான் படித்தது ஒரு கிராமச் சூழ்நிலையில்,என்னுடன் படித்த பொண்ணுங்கள
எப்போதாவது பார்க்க நேர்ந்தால் ரொம்ப ஆர்வமா பார்ப்பாங்க ஆனா பேசறதுக்கு தயங்குவாங்க,அப்படியே பேசினாலும் எந்திரத்தனமாய் ஒரு எப்படி இருக்க?அவ்ளோதான்.ஏன்னா எத்தனை கண்களுக்கு அதை நட்பா பார்க்கிற பக்குவம் இருக்கும்.அதுவும் கிராமப்புறத்தில் சொல்லவே வேண்டாம்.அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல தோன்றியதுதான் இந்த சிந்தனை.

Naresh Kumar said...

//பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!//

இயல்பாய் நடக்கின்ற ஒரு விஷயத்தை, அழகாய் சொல்லியிருக்கீறீர்கள்!

கடைசி கவிதை என்னை(யும்) சிந்திக்க வைத்தது! வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

Naresh Kumar said...
//பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!//

இயல்பாய் நடக்கின்ற ஒரு விஷயத்தை, அழகாய் சொல்லியிருக்கீறீர்கள்!

கடைசி கவிதை என்னை(யும்) சிந்திக்க வைத்தது! வாழ்த்துக்கள்
//

வாங்க நரேஷ்,
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க..!