Tuesday, March 11, 2008

இது காதல் காலமடி...! (பகுதி:4)

நீ
சிலை,
உன்னைப்
பார்த்த கணத்தில்
நானும்..!

எப்போதும் நிழலாய்
தொடர்வதைவிட,

உனக்குள்ளாகவே விழும்
நண்பகல் நிழலாக

நானிருக்க வேண்டும்..!

நித்தமும்
சுத்தம் செய்யப்படும் வீட்டினில்
படிந்துகொண்டே இருக்கும்
தூசியைப் போல,
வேண்டாமென நினைத்தாலும்;
வெகு இயல்பாய்
வந்தமரும் உன் ஞாபகம்..!

என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!

வேறுபட்ட ரசனையுடைய நாம்,
பழகிய சில நாட்களில்,
பிடித்த கவிதையின் சாயல்
என்னையுமறியாமல்
எனது கவிதையில் நுழைவது போல,
உனக்கான ரசனையில்
சிந்திக்க தொடங்கிய கணத்தில்
எனக்குள் நீ வந்திருந்தாய்..!

18 comments:

நித்யகுமாரன் said...

அன்பு இலக்கியன்...

“இதுதான் காதல் என்பதா..” என்று காதல் வந்த பிறகுதான் அதை அறியமுடியும். ஆனால் காதல் வரும் வழியைக் கண்டுபிடிக்கும் உபாயம் சொன்னதால், உங்களுக்கு “காதல் படிப்பான்” என்ற பட்டம் வழங்கி மகிழ்கிறேன்.

அன்பு டன் நித்யகுமாரன்

நாடோடி இலக்கியன் said...

vino said...
//wow awesome excellent :) veetula adi vaanga poreenga!!! paaathu eluthungae //

வாங்க வினோ,
முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
அப்படி என்ன எழுதிவிட்டேன் அடிவாங்கிறமாதிரி,கொஞ்சம் தெளிவா சொல்லிட்டுப் போங்க நண்பா.

நாடோடி இலக்கியன் said...

அன்பு நித்யன்,
தொடர்ந்து எனது கவிதைகளைப் படித்து,உற்சாகமூட்டும் பின்னூட்டம் கொடுத்து வருகின்றமைக்கு நன்றி.
வாழ்த்துவதோடு நில்லாமல், குறையிருப்பின் சு(கொ)ட்டி காண்பித்தால் மேலும் எனது எழுத்து மெருகேற உதவியாக இருக்கும்.

//உங்களுக்கு “காதல் படிப்பான்” என்ற பட்டம் வழங்கி மகிழ்கிறேன்.
//
என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே....
:)

ஸ்ரீ said...

ஏதாவது ஒன்று சொல்லலாம் என நினைத்தேன் முடியவில்லை. முதல் நான்கு கவிதைகளும் ரொம்ப அழகு :) வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஸ்ரீ,
இதற்கு முதல் பதிவில் முதல் கவிதை மிக ரசித்ததாக கூறியிருந்தீர்கள் , இப்பொழுது முதல் நான்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கின்றீர்கள், அடுத்த பதிவில் அத்தனையையும் ரசிக்கும்படி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தோடு விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்கிறேன்.
தொடரும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Naresh Kumar said...

காதலூட்டும் வரிகள்!

உங்களது மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டும் வரிகள்

வாழ்த்துக்கள்!

எழில்பாரதி said...

கவிதைகள் அனைத்தும் அருமை!!!


//என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!//

//வேறுபட்ட ரசனையுடைய நாம்,
பழகிய சில நாட்களில்,
பிடித்த கவிதையின் சாயல்
என்னையுமறியாமல்
எனது கவிதையில் நுழைவது போல,
உனக்காண ரசனையில்
சிந்திக்க தொடங்கிய கணத்தில்
எனக்குள் நீ வந்திருந்தாய்..! //


இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்!!!

நாடோடி இலக்கியன் said...

எழில்பாரதி said...
//கவிதைகள் அனைத்தும் அருமை!!!//

வாங்க எழில்பாரதி,

நீங்கள் ரசிக்கும் விதத்தில் கவிதை அமைந்ததில் மகிழ்ச்சி.
மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

Naresh Kumar said...
//காதலூட்டும் வரிகள்!

உங்களது மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டும் வரிகள்

வாழ்த்துக்கள்!
//

வாங்க நரேஷ் குமார்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

கதிர் - ஈரோடு said...

இலக்கியன்...

வரிகளைப் பிரித்துச் சொல்ல, பிரிக்க முடியவில்லை

இனிக்க இனிக்க காதல் வழிகிறது

கே.ரவிஷங்கர் said...

ரவிஷங்கர் said

//வாரமலரின் கடைசிப்பக்ககவிதையை விட்டு அடுத்தக் கட்டத்திற்கு போகலாமே//

வாஙக ரவிஷங்கர்.வருகைக்கு நன்றி.உங்க ரசனைக்கெல்லாம் நான் கவிதை எழுதமுடியுமா?

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்.(ரொம்ப நாட்களுக்கு முன்பு பதிவிட்டது).

நன்றி ரவிஷங்கர்,(இது பழைய இடுகைங்க,கொஞ்சம் அப்படியே ரீஸண்ட்டா எழுதின கவிதைகளையும் வாசித்துவிட்டு வாரமலரில் இருந்து முன்னேறி இருக்கேனான்னு சொல்லுங்க நண்பா).

கே.ரவிஷங்கர் said...

கவனிக்கல சார். ரிசண்ட் கவித படிச்சுப் பின்னூட்டம் இட்ட மாதிரி ஞாபகம்.

நல்லாத்தான்(ரிசண்ட் கவித)இருந்தது.

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//நித்தமும்
சுத்தம் செய்யப்படும் வீட்டினில்
படிந்துகொண்டே இருக்கும்
தூசியைப் போல,
வேண்டாமென நினைத்தாலும்;
வெகு இயல்பாய்
வந்தமரும் உன் ஞாபகம்..!

என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!//

இவை இரண்டும் இனிமை.

சி.கருணாகரசு said...

கவிதை நெகிழ்வாய் இருக்கு... ஆனா கொஞ்சம் வயசானதுபோல தெரியுதே.(உங்க படம்)

நாடோடி இலக்கியன் said...

நன்றி கருணாகரசு,(படத்திற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் நண்பரே,ஏன் அப்படி சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?).

nila said...

அழகான கவிதை!!!!

ஸ்ரீமதி said...

மிக அழகான கவிதைகள் அண்ணா.. :)))