அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!
நீ உண்ணும் போது மட்டுமாவது
உன்னை நினைக்காமலிருக்க
நினைக்கிறேன்,
உனக்கு புரையேறிவிடக்
கூடாதென்பதற்காக!
வான்வெளியைப் பற்றி
ஆராய்ச்சி செய்யுமளவுக்கு
ஞானமிருந்தாலும்,
நீ கேட்கும்,"நிலா பெரியதா?,
நட்சத்திரம் பெரியதா?"
என்பது போன்ற,
குழந்தைத்தனக்
கேள்விக்கெல்லாம்,
தெரியாதென்றே
சொல்லி வைப்பேன்,
"இது கூடத் தெரியாதா?" என்றுக் கூறி,
என்காதைப் பிடித்துத்
திருகுவாயே அதற்காகவே !
என் தங்கையோடு
நானிருந்த புகைப் படத்தை
நேற்று உன்னிடம் காட்டினாளாமே,
அதைக் காணோமென்று
இங்கே தேடிக் கொண்டிருக்கிறாள்
பைத்தியக்காரி!
மார்கழி அதிகாலை
நீ ஈரக்கூந்தலோடு,
கோலமிட்டுக் கொண்டிருக்கிறாய்,
உன் நெற்றியில் ஒதுங்கிய
கற்றைக் முடியில்,
வழிந்து வந்த
ஒற்றைத் துளி நீர்,
நான் காதலை சொல்ல,
தயங்கி நிற்பது போலவே,
கீழே விழலாமா?,வேண்டாமா?
எனத் தயங்கி நிற்கிறது!
Thursday, March 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நாடோடி இலக்கியன்...
தேனிலவுக்கு வந்திருக்கும் புதுமணப்பெண்ணின் வெட்கம் நிறைந்த முகம் போன்று உங்கள் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுகிறது.
அடிக்கோடிட்டு ரசிக்கும் உங்களின் வழக்கம்... அற்புதம்.
இப்போதா அல்லது சற்று நேரம் கழித்தா என்று யோசித்து நிற்கும் ஒருதுளி நீரோடு உங்களின் ஆசையும் தொக்கி நிற்கும் இடம்.... பிரமாதம்.
பேரன்புடன் நித்யகுமாரன்
nice!
Wow Wonderful !
இன்று நான் ரசித்த கவிதைகளில் இதும் என் பட்டியலில் இடம் பெறுகிறது.
ரொம்ப நல்லாயிருக்கு...வாழ்த்துகள்
கடைசி வரிகளே விழாமல் நிற்கின்றன உங்கள் கவிதையில்....
God Bless You
வாங்க நித்தியகுமாரன்!
முதல் வருகைக்கும்,கவிதை மாதிரியான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
2008ம் ஆண்டு நிறைய புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் வலம் வருகிறார்கள்,
அந்த வகையில்,நீக்கள் புதிய பதிவராக இருந்தாலும் உங்களின் எழுத்து ஆரம்பத்திலேயே அசத்தலாக இருக்கிறது.
//Anonymous said...
nice!//
வாங்க அனானி!
thanks for your comment.
வாங்க மேஹா!
முதல் வருகைக்கும்,உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகள் :)
நல்லா இருக்கு கவிதை எல்லாமே. முதல் கவிதை ரொம்ப ரசித்தேன்
வாருங்கள் நவன்,
முதல் வருகைக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
வாங்க ஸ்ரீ ,
நீங்கள் ரசித்து படிக்குமளவுக்கு கவிதை எழுதியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உற்சாகமூட்டும் மறுமொழிக்கு நன்றி.
முதல் கவிதை மிக அருமை!
சில சமயங்களில் அனைத்து வரிகளுமே நமக்கு பிடித்துப் போய் விடுகிறதே அதைப் பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்?
:)
Naresh Kumar said...
//முதல் கவிதை மிக அருமை!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நரேஷ்.
//சில சமயங்களில் அனைத்து வரிகளுமே நமக்கு பிடித்துப் போய் விடுகிறதே அதைப் பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்?//
:)
அரை பிளேடு said...
//:)//
வாங்க அரைபிளேடு,
// :) //
இதுக்கு என்னங்க அர்த்தம்,கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு போங்க நண்பரே!
//அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!//
:))))
குறும்பும் காதலும் நீக்கமற நிறைந்திருக்கிறது
உங்கள் கவிதைகளில்....
மிகவும் ரசித்தேன்... :)))
நவீன் ப்ரகாஷ் said...
//குறும்பும் காதலும் நீக்கமற நிறைந்திருக்கிறது
உங்கள் கவிதைகளில்....
மிகவும் ரசித்தேன்... :)))//
வாங்க நவீன் பிரகாஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..!
உங்கள் கவிதைகளில் உள்ள குறும்புத்தனங்களுக்கு நான் பெரிய ரசிகன்.
Post a Comment