Thursday, August 20, 2009

நாங்களும் போடுவோம்ல எதிர் கவுஜ

நல்ல சரக்கு இங்கே:

டாஸ்மாக்கில்
கட்டிங் அடிக்கவென்று வருவாய்
உண்மையைச் சொல்
என்றாவது கட்டிங்கோடு
நிறுத்தியிருக்கிறாயா?!

நாம் சேர்ந்து குடிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்
நீ என்னை சும்மா பார்க்க வந்தாலே
”எனக்கும் ஒரு 60” என்கிறார்கள்...!

”சரக்கடிப்பாயா?” என்று
நான் மட்டும் தானே கேட்டேன்
இப்படி ஓவரா போட்டுவிட்டு
ஊருக்கே உளறுகிறாயே..!

அன்றொரு நாள்
நீ டாஸ்மாக்கில்
குவாட்டரோடு கவுந்து கிடந்தாயே
நினைவிருக்கிறதா?
அன்றுதான் நான் ஃபுல் அடித்தும்
சரக்கு பத்தாமல்
புலம்பிக் கொண்டிருந்தேன்..!

வாங்கி வைத்த சைடிஷ்
எங்கேடா காணோமென்று
யாரோ உன்னிடம் கேட்க
நீ என்னை பார்த்தாயே
நினைவிருக்கிறதா?

”உனக்குப் பிடித்த சரக்கு எது?” என்றாய்
”பக்காடி” என்றேன்
”ஹேய் சேம் பிளட்” என்று
துள்ளிக் குதித்தாயே
நினைவிருக்கிறதா..!

நேற்று ஆர்மியில் இருந்து
ஊருக்கு லீவில் வந்த என் தம்பியை
அவன் கேளாமலே
டூவீலரில் ட்ராப் செய்தாயாமே
அவன் உன்னை மெச்சிக்
கொண்டே இருக்கிறான்
தெரியாமல் தான் கேட்கிறேன்
வேறு எவனாவது கெஞ்சினாலும்
நீ லிஃட் கொடுப்பாயா?

உன் வீட்டில்
உன் அண்ணன் தொல்லையென்று
சரக்கை நீ
என் வீட்டில் ஒளித்து வைக்கிறாய்
எதற்கும் எங்க அண்ணனும்
வீட்டில் இருக்கிறானா
என்பதையும் பார்த்துக் கொள்..!

ஆளே இல்லாத சாலையிலும்
நீ சவுண்ட் விடுகிறாய்
அருகே டாஸ்மாக்..!

சரக்கை திறந்துவிட்டு
பொங்கி வருவதை ரசிப்பாய்
உன் வாயில் பொங்கி வருவதை
என்னவென்று சொல்வது..!

குவாட்டரும் ஃபுல்லாகும்
நீ சீக்கிரமே மட்டையாகும் போது..!

டாஸ்மாக்கை பார்த்துக் கொண்டே
வந்த என்னிடம்
எதிரே இருந்த
முனியாண்டி விலாஸில்
சைடிஷ்ஷும் வாங்க சொல்கிறாய்..!

அன்றொரு நாள்
குவாட்டர் அடித்துவிட்டு
ஃபுல் அடித்ததாய் பாவனை செய்தேன்
என்ன செய்கிறாய் என்றாய்
சரக்கடித்தால் அப்படிதான்
செய்வேன் என்றேன்
”நாதாரி உங்க அப்பா வறார்
எங்காவது ஓடி ஒளிந்துகொள்” என்றாயே
நினைவிருக்கிறதா?

பதிவுலக சரித்திரத்தில் நமக்கு நாமே திட்டமாக என் கவிதைக்கு எதிர் கவுஜ நானே போட்டுகிட்டேன்.

21 comments:

நாஞ்சில் நாதம் said...

//சரக்கடிப்பாயா என்று
நான் மட்டும் தானே கேட்டேன்
இப்படி ஓவரா போட்டுவிட்டு
ஊருக்கே உளருகிறாயே..!

வாங்கி வைத்த சைடிஷ்
எங்கேடா காணோமென்று
யாரோ உன்னிடம் கேட்க
நீ என்னை பார்த்தாயே
நினைவிருக்கிறதா?//

இந்த ரெண்டும் தான் சூப்பர்

ஸ்ரீமதி said...

நாந்தான் ஃப்ர்ஸ்ட்டுன்னு நினைச்சேன்.. :)

ஸ்ரீமதி said...

என்ன அண்ணா இதெல்லாம்?? (எதிக்கவுஜன்னு சொல்லக்கூடாது)...
நல்லா இருக்கு.. பட் புரியல... :(

ஸ்ரீமதி said...

இது என்ன புது ட்ரெண்ட்? உங்க கவிதைக்கு நீங்களே எதிக்கவிதையும் போடறீங்க?? :))

ஸ்ரீமதி said...

//பதிவுலக சரித்திரத்தில் நமக்கு நாமே திட்டமாக என் கவிதைக்கு எதிர் கவுஜ நானே போட்டுகிட்டேன்.//

:(((((((

ஸ்ரீமதி said...

அந்த கவிதைல நான் அல்ரெடி கும்மிட்டனா?? :))

இரும்புத்திரை அரவிந்த் said...

முதல்ல கவிதைய படிச்சது நான்தான்

இங்க வந்து பார்த்தா நாதமும் ,ஸ்ரீமதியும் பொங்கு ஆட்டம் ஆடுறாங்க

நைனா,டக்ளஸ் ஓடி வாங்க

நம்ம சங்கத்து ஆழ அடிச்சிட்டாங்க

இரும்புத்திரை அரவிந்த் said...

முதல்ல கவிதைய படிச்சது நான்தான்

இங்க வந்து பார்த்தா நாதமும் ,ஸ்ரீமதியும் போங்கு ஆட்டம் ஆடுறாங்க

நைனா,டக்ளஸ் ஓடி வாங்க

நம்ம சங்கத்து ஆள அடிச்சிட்டாங்க

நையாண்டி நைனா said...

அண்ணே.... ஏன் இந்த கொலைவெறி...

புரியுது... புரியுது.... நான் கவிதை எழுதுனா தானேடா... நீங்க எதிர்கவுஜை போடுவீங்க... இப்ப நானே எதிர் கவுஜை போட்டுட்டேன்.. இப்ப நீங்கல்லாம் உங்க முகத்தை எங்கே கொண்டு போய் வச்சிகிருவீங்கன்னு கேட்காமே கேட்குறீங்க...

வேண்டாம்னே இந்த அறச்சீற்றம்... பொறுமை... பொறுமை...
பொறுமை கடலினும் பெரிது.

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
தண்டோரா ...... said...

அண்ணே..நல்ல மப்புல இருக்கேன்..சூப்பர்.ஆனா நம்ம சரக்கை ..எப்படி பிராந்தியை ரம்மா மாத்தி..டேய்ய்ய்

☼ வெயிலான் said...

// என் கவிதைக்கு எதிர் கவுஜ //

ம்ஹீம்.... நான் நம்பமாட்டேன்.

இது குடுகுடுப்பை எதிர்க்கவிதைக்கு எதிரெதிர் கவிதை :)

☼ வெயிலான் said...

http://kudukuduppai.blogspot.com/2008/12/blog-post_27.html

இது குடுகுடுப்பையோட எதிர் கவிஜ

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்.(அடுத்த முறை ஜமாய்ச்சுடலாம்).

நன்றி ஸ்ரீமதி.

நன்றி அரவிந்த்.(வட போச்சா)

நன்றி நையாண்டி நைனா.(உங்க அளவிற்கு முடியாதுப்பா).

நன்றி தண்டோரா.

நன்றி வெயிலான்.(ஏன் மீ மீ இ கொ வெ)

இரும்புத்திரை அரவிந்த் said...

innum 53 vada intha blogla paakki irukku thala

நட்புடன் ஜமால் said...

பதிவுலக சரித்திரத்தில் நமக்கு நாமே திட்டமாக என் கவிதைக்கு எதிர் கவுஜ நானே போட்டுகிட்டேன். ]]

ஹா ஹா ஹா

இது நல்ல திட்டமா இருக்கே

க. பாலாஜி said...

//என் வீட்டில் ஒளித்து வைக்கிறாய்
எதற்கும் எங்க அண்ணனும்
வீட்டில் இருக்கிறானா
என்பதையும் பார்த்துக் கொள்..!//

இது சூப்பர்ப்பபூ......

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

தமிழ்ப்பறவை said...

என்ன கொடுமை சார் இது..?!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!