Sunday, July 26, 2009

ஜன்னலோர இருக்கை...

வழக்கமான ரயில் பயணம்,
அடித்துப் பிடித்தாவது
அமர்ந்து விடுகிறேன்
இதே ஜன்னலோர இருக்கையில்,
ஒரு மணிநேர இப்பயணத்தில்
ஓடிவந்து டாட்டா காட்டும்
இரட்டைச் சிறுவர்கள்,
தன் பாட்டியோடு அமர்ந்து
பூ கட்டும் தெற்றுப் பல் சிறுமி,
பார்த்ததும் தலையாட்டும்
பெட்டிக்கடை பெரியவர் என
என்னின் வருகையை
சினேகத்தோடு எதிர் நோக்கும்
அவர்களைப் பாராது
எதையோ இழந்தது போலாகிவிடுகிறது
இவ்விருக்கையை
தவற விடும் நாட்களில் ...!

13 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு பிரயாணியின் சாதாரண ஆசை.. நல்லா இருக்கு நண்பா..

துபாய் ராஜா said...

நாலு நல்ல(பிகரு)வங்களை பார்க்கனும்னா ஜன்னலோர இருக்கைக்கு சண்டை போடறது தப்பில்லை. :))

நையாண்டி நைனா said...

உங்க கவிதைக்கு எதிர் கவுஜ, உங்க கடைக்கு எதிராலே இருக்குற நம்ம கடையிலே...

குடந்தை அன்புமணி said...

நான்கூட தினசரி ரயில் பயணம் செய்கிறேன். ஜன்னலோர இருக்கையைத்தான் விரும்புவேன். வழியில் எத்தனை காலேஜ் இருக்கு தெரியுமா?

நாடோடி இலக்கியன் said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

நன்றி துபாய்ராஜா.

நன்றி நையாண்டி நைனா.

நன்றி குடந்தை அன்புமணி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எளிமையான ,அழகான கவிதை பாஸ்.உங்களுடைய மற்ற கவிதைகளையும் ரசித்தேன்.வாழ்த்துகள்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீதர்,(உங்க பதிவுகளும் அசத்தலாக இருக்கிறது நண்பரே).

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

குடந்தை அன்புமணி said...
நான்கூட தினசரி ரயில் பயணம் செய்கிறேன். ஜன்னலோர இருக்கையைத்தான் விரும்புவேன். வழியில் எத்தனை காலேஜ் இருக்கு தெரியுமா? ////

மணி... இது நல்லாயில்ல..

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனக்கும் ஜன்னலோரம் ரொம்ப பிடிக்கும்.

அன்புடன் அருணா said...

எனக்கு ஜன்னலோரம் இல்லைன்னா ப்அயணமே வீணாப் போனது போலிருக்கும்.!

நாடோடி இலக்கியன் said...

நன்றி வண்ணத்துபூச்சியார்.
நன்றி ஸ்டார்ஜன்.
நன்றி அன்புடன் அருணா.

விக்னேஷ்வரி said...

எனக்கு இது போல் ஒரு பயணம் அமைந்ததில்லை. இனி அமைய விரும்புகிறேன். எளிமையான வரிகள். நல்லாருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.