Monday, July 27, 2009

வலி.....!

தவறான புரிதலிலேயே
சிக்கிக் கொண்டுவிடுகிறோம்
அனேக நேரங்களில்
நானும் எனது கவிதைகளும்,
எனது கவிதைகளை புரிந்துகொள்ள
குறைந்த பட்சம் நானிருக்கிறேன்
என்னை ..... .......?

என்னின் செயல்களை வைத்து
எனக்கான ஒரு பிம்பத்தை
கட்டமைத்து கொண்டாடி மகிழ்ந்தீர்,
நான் நானாகவே இருக்கிறேன்
திட்டமிடப்பட்ட சூழ்ச்சியில்
சிக்கி தடுமாறி நின்ற போது
சூழ்நிலையின் வீரியம் புரியாமல்
உங்கள் கட்டமைப்பில்
ஏதோ குறைவதாய் உணர்ந்து
என் மீது சேற்றை வாறி இறைத்தீர்
பொய்களுக்கு செவிமடுத்திருக்கும் உங்களிடம்
பகீரத பிரயத்தனம்
செய்தும்
ஊமையாகிப் போனோம்

உண்மையும் நானும் ,
உண்மை புரியும் பட்சத்தில்
உங்களின் மனசாட்சி உறுத்தக் கூடும்,
மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்,
வேண்டாம், உண்மை உங்களுக்கு
தெரியாமலே போகட்டும்
நீங்களாவது நிம்மதியாக இருங்கள்...

நான்
தவறாக புரிந்து கொ(ல்ல)ள்ளபட்ட
அக்கணத்திலிருந்தே
உலகை சரியாக
புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

(இது எனக்கு மட்டுமேயான புலம்பல் சும்மா பதிஞ்சு வச்சுக்கிறேன்).



4 comments:

ஈரோடு கதிர் said...

//நான் தவறாக புரிந்து கொ(ல்ல)ள்ளபட்ட
அந்த கணத்தில் இருந்துதான்
உலகை சரியாக
புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்...//

சரிதான்

துபாய் ராஜா said...

உன் ஃபீலிங்ஸ் புரியது நைனா... :(

http://naiyaandinaina.blogspot.com/2009/07/blog-post_27.html

எதிர்கவுஜ படிச்ச 'வலி' தானே இது :(

விக்னேஷ்வரி said...

தவறான புரிதலிலேயே
சிக்கிக் கொண்டுவிடுகிறோம்
அனேக நேரங்களில்
நானும் எனது கவிதைகளும்,
எனது கவிதைகளை புரிந்துகொள்ள
குறைந்த பட்சம் நானிருக்கிறேன்
என்னை ..... .......? //

ரொம்ப ரசிச்சு மறுபடியும் மறுபடியும் படிச்சேன்.

மொத்தமும் நல்லாருக்கு.

அன்புடன் நான் said...

நாடோடியின் கவிதை நச்!