நிசப்தம்சூழ் தனிமை
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காது
கொடுத்தும் முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க
முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!
(இதன் கருவை கவிதையாக்க பேருதவி புரிந்த வெயிலானுக்கு நன்றி).
Monday, July 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நல்லா இருக்கு பாரி.
அதனால்தான் பெரும்பாலான கணவர்கள் மனைவி சொல்வதற்குத் தலையாட்டி விடுகிறார்கள். எப்படியும் இறுதியில் அவர்கள் சொன்னதுதான் ஜெயிக்கும் அதற்கு முதலிலேயே சொன்னதைச் செய்துவிட்டால் நல்ல பேராவது கிடைக்குமே.
//ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்//
//காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை//
சொல்லாடல்களை ரசித்தேன்
மிக்க நன்றி அண்ணாச்சி,
//காட்டாற்று வெள்ளமென
பொங்கி பிரவகிக்கும் மோகத்தை//
முதலில் இப்படியிருந்ததை,
//காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை//
என மாற்றிக் மாற்றிக் கொடுத்த வெயிலானுக்கு மிக்க நன்றி.
போதையரங்கம்
சப்தம் சூழ் தனிமை,
வம்பாய் வந்தமர்ந்து
போட்டிக்கு போதையேற்றும்
முறுக்கேறிய மீசைக்காரன்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,
சிதறிக் கிடக்கும்
சுண்டல்களில் கண்ணும்,
சண்டைகளுக்கு காதும்
கொடுத்து முடியாது,
ஒழுங்கிலா டாஸ்மாக்கை
சுற்றி பார்கிறேன்.....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் சிறுநீரை
அடக்குவதென
இயற்கையை அடக்க
முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மேலும் இரண்டு பியரை,
ஏற்றி இருக்கலாம்...!
எப்பூடி....
போதை கொள்ளாது....மன்னிக்க... மன்னிக்க... காண்டு கொள்ளாது... இதனை எனது வலைப்பூவில் பதிய அனுமதி அளிக்க வேண்டுகிறேன்.
@நையாண்டி நைனா,
//காட்டாற்று வெள்ளமென
பொங்கும் சிறுநீரை
அடக்குவதென//
:)
permission granted ,you can proceed.
the title would be jaladharangkam right?
போட்டாச்சு.
மிக நன்றி.
மிக நன்றி..
பல சொற்கள் பல்லாங்குழி விளையாடியிருக்கிறது நண்பரே!
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்//////
நல்லாருக்கு....நாடோடி.
அனங்கரங்கம்
ஜலதரங்கம்
ரெண்டுமே சூப்பர்!
:)
நன்றி பரிசல்காரன்.
நன்றி கும்கி.
நன்றி மங்களூர் சிவா.
ரொம்ப நல்ல இருக்கு... ஆனாலும் ரொம்ப யோசிக்கக்கூடாது
நன்றி அரங்கபெருமாள்,(எதை யோசிக்கக் கூடாதுன்றீங்க நண்பரே,புரியல :) )
நன்றி சூரியன்,(என்னப்பா சிரிக்கிற)
Post a Comment