Thursday, July 9, 2009

கவிதைகள் மாதிரி சில

4.50 டிக்கெட்டுக்காகக்
கொடுத்த பத்து ரூபாயில்,
ஐம்பது பைசா சில்லறை
போனால் போகட்டும்,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
கண்டக்டரின் பின்னால்
அலையும் இதே மனதுதான்
தொலைதூரப் பயணங்களில்
ஐந்து ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!
=========================
குழந்தையின் காலினின்று
கழன்று விழப்போகும் செருப்பைக்
கவனியாது பயணிக்கும்
டூவீலர் தம்பதியரிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்,
அலுவலகம் வந்த பிறகும்
அதே சிந்தனை..!
==========================
முன் எப்போதோ
தொலைத்தப் பொருளை,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
கிடைக்காதெனத் தெரிந்தும்
அனிச்சையாய் தேடிப் பார்க்கும்
தொலைத்தவனின் கண்கள்..!
=========================
சிகரெட் பிடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
புகையும் 555....!

17 comments:

Unknown said...

கவிதை 2 & 3 நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்!

நர்சிம் said...

//முன் எப்போதோ
தொலைத்தப் .பொருளை,
தொலைத்த .இடத்தைக்
கடக்கும் .போதெல்லாம்,
கிடைக்காதெனத் .தெரிந்தும்
அனிச்சையாய் .தேடிபார்க்கும்
தொலைத்தவனின் .கண்கள்..!//

நல்லா இருக்கு நண்பா.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரவிஷங்கர்,(அடுத்த முறை எல்லாக் கவிதையும் நல்லாயிருக்குன்னு சொல்ற மாதிரி எழுத முயற்சிக்கிறேன் நண்பா).

நன்றி நர்சிம்,(இப்போதுதான் ட்ராக் மாறி எழுத ஆரம்பிக்கிறேன், உங்க பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது நண்பா)

நையாண்டி நைனா said...

57.ரூ. குவாட்டருக்காக
கொடுத்த நூறு ரூபாயில்,
மூணு ரூபா சில்லறை
போனால் போகட்டும்,
நாப்பது ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டாஸ்மாக் கவுண்டரில்
கத்தும் இதே மனதுதான்
நட்சத்திர விடுதிகளில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!

நையாண்டி நைனா said...

முன் எப்போதோ
குடித்து விழுந்து,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
யாருமறியாரென தெரிந்தும்
அனிச்சையாய் பிறரை தவிர்க்கும்
விழுந்து தொலைத்தவனின் கண்கள்..!

நையாண்டி நைனா said...

ஓல்ட் மங் அடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி ..அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
VAT 69 ....!

நையாண்டி நைனா said...

பேன்ட் பாக்கடிலிருந்து
கழன்று விழப்போகும் குவாட்டரைக்
கவனியாது பயணிக்கும்
முகமறியா நண்பனிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்
அலுவலகம் வந்த பிறகும்
அந்தச் குவாட்டரைப் பற்றிய
சிந்தனையிலேயே மனம்..!

நாடோடி இலக்கியன் said...

வாங்க நையாண்டி நைனா,
மிகவும் ரசித்தேன் உங்க எதிர் கவுஜைகள(எப்படீங்க இவ்ளோ ஃபாஸ்டா).

//முன் எப்போதோ
குடித்து விழுந்து,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
யாருமறியாரென தெரிந்தும்
அனிச்சையாய் பிறரை தவிர்க்கும்
விழுந்து தொலைத்தவனின் கண்கள்..!//

இது கலக்கலோ கலக்கல்...!

நையாண்டி நைனா said...

இந்த என்னோட மொக்கை கவுஜைகளை என்னோட பதிவுலே வெளி இடட்டுமா???

தினேஷ் said...

//4.50 டிக்கெட்டுக்காகக்
கொடுத்த பத்து ரூபாயில்,
ஐம்பது பைசா சில்லறை
போனால் போகட்டும்,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
கண்டக்டரின் பின்னால்
அலையும் இதே மனதுதான்
தொலைதூரப் பயணங்களில்
ஐந்து ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!///

super boss .. asaththungka


naina ungka kavuja kalakal

தொடர்பவன் said...

நையாண்டி நைனா said...
முன் எப்போதோ
குடித்து விழுந்து,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
யாருமறியாரென தெரிந்தும்
அனிச்சையாய் பிறரை தவிர்க்கும்
விழுந்து தொலைத்தவனின் கண்///

அனுபவக் கவிதையளித்த நைனா வாழ்க

நாடோடி இலக்கியன் said...

நையாண்டி நைனா,
தாராளமாக,

நன்றி சூரியன்.

தொடர்பவன்,
உங்களுக்கு நைனா சார்பில் நான் நன்றியைச் சொல்லிக்கிறேன்.

Unknown said...

அண்ணே நம்ம லேட்டஸ்ட் கவிதைப்
படிச்சுச் சொல்லுங்க.

’டீவி பார்க்கும் போது கவலைகள்”

நாஞ்சில் நாதம் said...

அட கவித நல்லாயிருக்கு

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில்நாதம்.

RATHNESH said...

வாழ்த்துக்கள். நல்ல கவிப் பார்வை உங்களுக்கு. 2 மற்றும் 3 ஆவது கவிதைகள் நன்றாகவே வந்துள்ளன.

//குழந்தையின் காலினின்று
கழன்று விழப்போகும் செருப்பைக்
கவனியாது பயணிக்கும்
டூவீலர் தம்பதியரிடம்//

குழந்தையே கழன்று விழப்போவது போல் பயணிக்கும் தம்பதியரைத் தாண்டிச் சென்று திட்டுவதற்கு நினைத்த சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரத்னேஷ்,(ஆமாங்க நானும் பார்த்து பதறியிருக்கிறேன்.)