Monday, November 17, 2008

என்னை மௌனமாக்கியவள் நீ..!

தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!


பாலில் கலந்த நீரை
பிரித்தறிந்த அன்னத்திடம்,
காதலில் கலந்த நம்மை
எது நீ,எது நானென
பிரித்தறிய சொல் பார்ப்போம்...!

என்னுள் எங்கோ
புதைந்திருந்த காதலுணர்வின்
மௌனத்தை கலைத்து ,
என்னை மௌனமாக்கியவள் நீ..!

மாறாத உண்மைகள் சில கூறு?
வேகமாய் சொல்கிறாய்,
"சூரியன் உதிப்பது கிழக்கு",
"வானின் நிறம் நீலம்",
"தேனின் சுவை இனிப்பு",
இப்படியாக
நீண்ட உன் பட்டியலில்,
நம் காதலும்
சேரும் என்பது
உனக்கேன் தோன்றவில்லை...!

4 comments:

ஸ்ரீ said...

//தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!//

Supera irukunga Ilakkiyan

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஸ்ரீ,
மிக்க நன்றிங்க,உங்க புகைப்படம் நேற்று பரிசலாரின் வலைப்பக்கத்தில் ஜொலித்தது.மிரண்டுவிட்டேன்.

ஸ்ரீமதி said...

Superb :))

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீமதி said...
//Superb :))

thanks ஸ்ரீமதி.