Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

8 comments:

ஸ்ரீமதி said...

Very nice :))

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீமதி said...
//Very nice :))

welcome srimathi,
thanks for ur comment.keep reading.

அன்புடன் அருணா said...

ரொம்ப யதார்த்தமான காதல்...
அன்புடன் அருணா

சதங்கா (Sathanga) said...

//"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,//

பெண்களுக்கே உரிய பொஸெஸிவ்நெஸ் .... அருமையான வரிகள்.

நாடோடி இலக்கியன் said...

@அன்புடன் அருணா,

"விழிபார்த்து கொஞ்சம் வந்தது விழி சேர்த்து கொஞ்சம் வந்தது முழுகாதல் என்று வந்தது தெரியாதே" அப்படின்னு ஒரு பாட்டில் வருமே அப்படி தனக்கே தெரியாமல் ஒருவனின் மேல் மெல்ல காதல்கொள்கிறவள் தன்னையுமறியாது என்னவெல்லாம் செய்வாள் என்பதை கொஞ்சமும் வார்த்தைகளில் செயற்கை தனமில்லாமல் இயல்பாய் வருகிற காதலை இயல்பான வார்த்தைகளில் எழுவேண்டுமென நினைத்து எழுதிய இந்த கவிதை யாருமே கவனிக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாய் இருந்தது,இப்போ "வெகு யாதார்த்தமான காதல்" என்ற உங்கள் பின்னூட்டம் ஆஹா சரியாக உள்வாங்கிக்கொண்டார் என்ற சந்தோஷத்தை தருகிறது சகோதரி.

நாடோடி இலக்கியன் said...

@ சதங்கா ,
ஆமாங்க,ஒரு பொண்ணு தன்னையுமறியாமல் காதலை வெளிப்படுத்தும் தருணங்களில் இந்த பொஸஸிவ்னெஸ்ஸும் ஒன்று.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சதங்கா.

Unknown said...

Good

நாடோடி இலக்கியன் said...

நன்றி சரண்யா.