Wednesday, March 26, 2008

என்னைப் பற்றி என்ன நினைக்கிற?

சிரிக்கிறாய்
அழகென்றேன்,
சிவக்கிறாளே
என்ன செய்ய..?

”என்னைப் பற்றி என்ன நின்னைகிற?”
என்று கேட்கிறாய்
”என்னைப் பற்றியே ஏன் நினைக்கிற?”
என்று கேள்
சரியாய் இருக்கும்..!

நேற்று யாரோ உன்னைக்
கேலி செய்கையில்
“போடா பொறுக்கி” என்றாய்,
இன்று நான் முத்தம் கேட்கும்போதும்
அதையேச் சொல்கிறாய்
ஆனாலும் எவ்வளவு வித்தியாசம்..!

16 comments:

Dreamzz said...

/சிரிக்கிறாய்,
அழகென்றேன்,
சிவக்கிறாய்,
என்ன செய்ய..!

"என்னைப் பற்றி என்ன நினைக்கிற?"
என்று கேட்கிறாய்,
"என்னைப் பற்றியே ஏன் நினைக்கிற?"
என்று கேட்டிருந்தால்,
பொருத்தமாக இருந்திருக்கும்....!//

காதல் காதல் :)
அருமை நண்பரே!

நித்யகுமாரன் said...

சிரிக்கிறாய்,
அழகென்றேன்,
சிவக்கிறாய்,
என்ன செய்ய..!

*******

அழகு அழகு...

அன்புடன் நித்யகுமாரன்

திகழ்மிளிர் said...

வார்த்தையால்
வருணிக்க முடியாதது
உங்களின் வரிகள் மட்டுமல்ல.
அதைவிட அழகானது உங்களின் கவிதையும் தான்


நன்றி

ஸ்ரீ said...

என்னத்த நினைக்க? "ஏண்டா உனக்கு இப்படி தோண மாட்டேங்குது"ன்னு தான் நினைக்கிறேன். பொறுக்கி கவிதை நொறுக்கி விட்டது போங்க. அது எக்ஸ்ட்ரா அழகு :). 2வது படம் எனக்கு தெரியவில்லை தயவு செய்து பின்னூட்டத்தில் போடவும். (எல்லாம் ஒரு ஆர்வம் தான்)

தஞ்சாவூரான் said...

இதெல்லாம் பத்திரமா சேத்து வையுங்க :)

நாடோடி இலக்கியன் said...

Dreamzz said...
//
காதல் காதல் :)
அருமை நண்பரே!

//
வாங்க Dreamzz,
கருத்துக்கும்,தொடரும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

நித்யகுமாரன் said...
//
அழகு அழகு...
//

வாங்க நித்யன்,
நன்றிங்க,
(இரண்டு வாரமா இங்கே வருகை பதிவும் இல்லை,அங்கே புதிய பதிவும் இல்லை,என்னாச்சு நித்யன்.விரைவில் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.)
:)

நாடோடி இலக்கியன் said...

திகழ்மிளிர் said...
//வார்த்தையால்
வருணிக்க முடியாதது
உங்களின் வரிகள் மட்டுமல்ல.
அதைவிட அழகானது உங்களின் கவிதையும் தான்//

வாங்க திகழ்மிளிர் ,
மிக்க நன்றிங்க.
அப்படியே புல்லரிச்சு போச்சுங்க உங்க பின்னூட்டத்தை பார்த்தப் பொழுது.
ஆமா நெசமாத்தான் சொல்றீங்களா?
:)

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீ said...
//என்னத்த நினைக்க? "ஏண்டா உனக்கு இப்படி தோண மாட்டேங்குது"ன்னு தான் நினைக்கிறேன். பொறுக்கி கவிதை நொறுக்கி விட்டது போங்க. அது எக்ஸ்ட்ரா அழகு :). 2வது படம் எனக்கு தெரியவில்லை தயவு செய்து பின்னூட்டத்தில் போடவும். (எல்லாம் ஒரு ஆர்வம் தான்)//


வாங்க ஸ்ரீ,

//என்னத்த நினைக்க? "ஏண்டா உனக்கு இப்படி தோண மாட்டேங்குது"ன்னு தான் நினைக்கிறேன்.//

இதை நான்தான் சொல்லணும்,
//பொறுக்கி கவிதை நொறுக்கி விட்டது போங்க//

அட,உங்க காதல்தினம் என்னை நொறுக்கிடுச்சு.

//2வது படம் எனக்கு தெரியவில்லை //

அப்படியா ,இப்போ சரியா இருக்கா?

//(எல்லாம் ஒரு ஆர்வம் தான்)//
உங்க அன்பான ஆர்வத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீ..!
:)

தமிழ் குழந்தை said...

நல்ல கவிதை வரிகள்

Divya said...

மிகவும் ரசித்தேன்....அழகான வரிகள்!!

நாடோடி இலக்கியன் said...

தஞ்சாவூரான் said...
//இதெல்லாம் பத்திரமா சேத்து வையுங்க :)//

வாங்க தஞ்சாவூரான்,
உங்க நல்ல மனசுக்கு நன்றி அண்ணாச்சி..!
:)

நாடோடி இலக்கியன் said...

தமிழ் குழந்தை said...
//நல்ல கவிதை வரிகள்//

வாங்க தமிழ் குழந்தை ,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

Divya said...
//மிகவும் ரசித்தேன்....அழகான வரிகள்!!//

வாங்க திவ்யா,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க...!

நவீன் ப்ரகாஷ் said...

காதலில் முக்குளிக்க வைக்கின்றன கவிதைகள்
அனைத்தும்... பொறுக்கி எடுத்த கவிதை
மிக அழகு....:)))

நாடோடி இலக்கியன் said...

நவீன் ப்ரகாஷ் said...
//காதலில் முக்குளிக்க வைக்கின்றன கவிதைகள்
அனைத்தும்... பொறுக்கி எடுத்த கவிதை
மிக அழகு....:)))//

வாங்க நவீன் பிரகாஷ்,
"பொறுக்கி" கவிதைக்கு சிலேடையிலேயே பின்னூட்டமிட்டு கலக்கிடீங்க.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.