(2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு எழுதியது)
அன்று
பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
*********************************************
அன்று
உணவிற்காகக் கொடுத்தோம்
பலருக்கு
அடைக்கலம்
இன்று
உணவிற்காகப்
பட்டக் கடனை
எப்படி
அடைக்கலாம்!!
************************************************
அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!
************************************************
அடுத்த வேளை கஞ்சிக்கு
அண்ணார்ந்துப் பார்த்த
குழந்தையிடம்
"மழை வேண்டி மாரியாத்தாளுக்கு விரதம்
ஒரு வேளைதான்சாப்பிடோனும்"
இல்லாமையால்
சொன்னாள் தாய்!!!
*************************************************
குறிஞ்சியும் ,முல்லையும்
பூத்துக் குலுங்கிய
இந்த மருத நிலத்தில்தான்
பட்டு நெய்தலும்
சிறப்புற்று விளங்கியது
ஆனால் இன்றோ
காவிரி கைவிரித்ததால்
ஆனது பாலை!!!!
Monday, August 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Imaihalai nanaithu idhayathai pizhiyum unarchimihu 'Paa'kkal(Kavidhai enbadhu Thamizh Chol allavay!) Vazhthukal! valarattum Thamizhpani!!
Rajasekar
(thamizhpavai@yahoo.com)
உங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜசேகர்!!!!
வேதனையான உண்மை வார்த்தைகள்... காவிரி கைவிரித்தாலே நமக்கு சோகம்தான்..
that was an wonderful poem..
the feelings that was given can never b explained easily..
heart touching one..
congrats for ur work...
continue the same....
========
அன்று
பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
========
வெகு அருமை நாடோடி இலக்கியன். கண்ணீர் பெருக்கெடுக்கும் வரிகள். தஞ்சையை வஞ்சித்தது உலகுக்கே பெரும் பாவம்!
- ஒரத்தநாடு அன்புடன் புகாரி
புகாரியின் பாராட்டுகள் - நன்று நன்று
நெற்களஞ்சியம் தஞ்சையில் வறட்சி - என்ன செய்வது .......
தாழி - தாலி
அடைக்கலம் -அடைக்கலாம்
வேளை - வேலை
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
ரசித்தேன் ரசித்தேன் - மகிழ்ந்தேன் -
காவேரிக் கரையோரக் கவலைகள் கவிதையாய் கொட்டுகின்றன
Post a Comment