Thursday, January 31, 2008

மோகம்.....!

வைகறைப் பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு நீ
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்...!

14 comments:

L N Srinivasakrishnan said...

புலவரே! எங்கேயாவது on-site project லே மாட்டிக்கிட்டீங்களா? :)

அழகான சித்திரம் - நல்ல கவிதை! மோகத்தை போகமாக்குவற்கு ஒரே வழி!இல்லையேல் சோகமாகிவிடும்.


If you don't mind, please correct typo:

"வேண்டாம் என
வெல்லும் சோம்பல்"

நாடோடி இலக்கியன் said...

L N Srinivasakrishnan,
//அழகான சித்திரம் - நல்ல கவிதை! மோகத்தை போகமாக்குவற்கு ஒரே வழி!இல்லையேல் சோகமாகிவிடும்.


If you don't mind, please correct typo:

"வேண்டாம் என
வெல்லும் சோம்பல்" //


பாராட்டுக்கும்,பிழைத் திருத்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே!!

நித்யகுமாரன் said...

அடா...
அடா...
அடா...

பின்றீங்க...

வாழிய...!

அன்பு நித்யகுமாரன்

நாடோடி இலக்கியன் said...

நித்யன்,
கவிதையை பாராட்டியதோடு நில்லாமல்,அதன் பாதிப்பில் உங்கள் வலைப்பூவில் இன்னொரு அழகான கவிதை படைக்கும் அளவுக்கு என்னுடைய கவிதை இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

padma said...

avlo thana:)

நாடோடி இலக்கியன் said...

padma said...
//avlo thana:)//
வாங்க பத்மா,
அவ்ளோதாங்க..
:)

subrarajan said...

mikavum arputham

ganesh said...

UNGAL KAVITHAYAI ENADHU PADHIVILUM POTIRUKIREN....UNARVUGALIN UYIROTTAHTHAI UNARNDHADHAAL....ARUMAI....VAALTHUKKAL

தஞ்சாவூரான் said...

இலக்கியன்,

் புதுசா கல்யாணமானவங்க அனுபவிச்சு எழுதுறது எல்லாம் உங்களுக்கு நல்லா வருதே?

ஜமாய்ங்க :)

நாடோடி இலக்கியன் said...

தஞ்சாவூரான் said...
//இலக்கியன்,

் புதுசா கல்யாணமானவங்க அனுபவிச்சு எழுதுறது எல்லாம் உங்களுக்கு நல்லா வருதே?

ஜமாய்ங்க :)
//
வாங்க தஞ்சாவூரான்,

:)

(வேற என்ன சொல்றது..!)

நாடோடி இலக்கியன் said...

ganesh said...
//UNGAL KAVITHAYAI ENADHU PADHIVILUM POTIRUKIREN....UNARVUGALIN UYIROTTAHTHAI UNARNDHADHAAL....ARUMAI....VAALTHUKKAL//

வாங்க கணேஷ்,

தாராளமா செய்து கொள்ளுங்கள்,ஆனால் தவறாமல் எனது பதிவின் சுட்டியை(url) தந்துவிடுங்கள்.

நாடோடி இலக்கியன் said...

subra said...
//mikavum arputham//

நாகராஜ்,
ரொம்ப நன்றிடா..!

cheena (சீனா) said...

தஞ்சாவூரான் கூறியது உண்மை - புதியதாக மணம் புரிந்த மணமக்கலீன் நில - அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்
வேண்டாமென வெல்லும் சோம்பல்
ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்

நான்கு வரிகள் நாற்பது பக்கக் கதைகள் கூறுகின்றன.

நன்று நன்று நல்வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றி சீனா சார்.