Monday, April 12, 2010

கிறுக்கல்கள் 3

அழுக்கு ஜன்னல்களுக்கான மவுசு
அலங்கார வாசற்கதவுகளுக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அழகான பெண்களிருக்கும் வீடுகளில்...!

@@@@@@@@@@@@@@@@@@

நடுநிசி தாண்டி நீளும்
அலைபேசி உரையாடல்களில்
அடுத்தென்ன பேசுவதெனப் புரியாது
இடையிடையே நிலவும்
சிலநொடி பெருமௌனங்களிலெல்லாம்
பிறகு பேசலாமென
அழைப்பைத் துண்டிக்க நினைப்பேன்
`அப்புறம் சொல்லுங்க` என்று
மீண்டும் ஆரம்பிப்பாயே
அதில்தானடி ஒளிந்திருக்கிறது
அடர்த்தியாய் நம் காதல்..!

@@@@@@@@@@@@@@@@@@

அலைபேசியில் யாரோடோ
கொஞ்சிப் பேசியபடி வரும்
பின்னிருக்கை வசிகரக்குரலியைத்
திரும்பிப் பார்க்கச் சொல்லி
அடம்பிடிக்கும் மனதை
நாகரிகம் கருதி அடக்குகிறேன்,
தொடர்ந்து கேட்கும்
அக்கொஞ்சல் மொழியில்
தொலையாத ஏதோ ஒன்றைத்
தொலைத்ததாய் தேடும் பாவனையில்
என் நிறுத்தம் வருமுன்
அவளைப் பார்த்துவிட்டே இறங்குகிறேன்
ஜென்மம் ஈடேரியதொரு திருப்தியோடு..!

18 comments:

ஈரோடு கதிர் said...

மூன்றும் நல்லாயிருக்கு பாரி

சிவக்குமரன் said...

welcome pari!?

we missed you dude!

பிரபாகர் said...

வருக வருக என் அன்பு நண்பா!

கதிர் சொன்னதுதான்... அருமை. அப்புறம் சொல்லுங்க, அனுபவித்த அருமை.

பிரபாகர்...

vasu balaji said...

மூன்றுமே நன்றாயிருக்கிறது பாரி.

/அலைபேசியில் யாரோடு/

யாரோடோ?

அன்பேசிவம் said...

மூணாவது எல்லாருக்கும் கிடைக்க பெற்ற அனுபவம்தான், ஆனால் சொன்னவித அழகு. :-)
மாப்ள ம்ம்ம்....

விக்னேஷ்வரி said...

நல்ல ஃபார்ம்ல திரும்பி வந்திருக்கீங்க. ரெண்டாவது ரொம்ப நல்லாருக்கு. எல்லாமே நல்லாருக்கு.

சத்ரியன் said...

நண்பா,

இரண்டாவதும், மூன்றாவதும்.... என்னன்னு சொல்லுவேன்....!

(முன்பொருமுறை சொன்னீர்கள், நம்மிருவருடைய கவிதைகளும் ஒன்றினார்ப் போலிருக்கும் என... உண்மைதான்)

☼ வெயிலான் said...

திரும்பவும் மொதல்லருந்தா?

ம்.... நடக்கட்டும். நடக்கட்டும்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்.

நன்றி சிவா,(விரைவில் நேரில் சந்திப்போம் சிவா).

நன்றி பிரபா.(`அப்புறம் சொல்லுங்க` நான் அனுபவித்திக்கொண்டிருக்கும் அருமை :)))))))))))))

நன்றி வானம்பாடிகள்,(யாரோடோவேதான் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிங்க சார்).

நன்றி முரளி.

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி சத்ரியன்.(ஆம் சில காதல் கவிதைகளில் அப்படி உணர்ந்திருக்கிறேன்).

நன்றி வெயிலான்.(ஹி ஹி)

thamizhparavai said...

தலை... கலக்கல்... ரசித்தேன்... இரண்டாவதும், மூன்றாவதும் பிடித்திருந்தது...

முகவை மைந்தன் said...

எனக்கு முதலாவது பாடல் (தான்) புடிச்சுருக்கு. அளவான சொற்களில் நிறைவான கதை :-)

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை.(நண்பா எவ்வளோ நாளாச்சு).

நன்றி முகவை மைந்தன்,(முதலாவது இருப்பது பாடலா?அவ்வ்வ்வ்வ்வ்)

ஜோசப் பால்ராஜ் said...

நல்வரவு கவிஞர் இலக்கியன்.

இலக்கிய கவிதைகள் அப்டின்னு சீக்கிரம் ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டுருவோமா?

எல்லாமே மிக நல்லாருக்கு.

க.பாலாசி said...

முதல் கவிதைய இதோட நாலாவது முறையா படிச்சிகிட்டிருக்கேன்... சூப்பரனா கவிதை... உண்மையும்கூட...

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜோ,(ம்ம்ம் உ.கு புரியுது இருந்தாலும் சுகமான உ.கு).

நன்றி பாலாசி.

Karthikeyan said...

மிக மிக அருமை

Karthikeyan said...
This comment has been removed by the author.
Thanglish Payan said...

mudhal kavithai asathal...
arumai...