Friday, December 25, 2009

மதனோற்சவம்

வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!

14 comments:

சிவக்குமரன் said...

என் செல்ல கன்னுகுட்டி என்னமா பீல் பண்ணுது!!!

ஏன், ராசா இப்பிடிலாம்?

அத்திரி said...

ம்ம்ம்...... அருமையான அம்சமான அழகான வரிகள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவா,(ஹி ஹி).

நன்றி அத்திரி.

Kumky said...

நண்பரே .,

கவிதைய விடவும் ப்ரோபைல்ல நீங்க முறைச்சுட்டிருக்கற போட்டோதான் மனசுல நிக்குது....

நாடோடி இலக்கியன் said...

நன்றி கும்க்கி,(உம்மை நேரில் கவனிக்குறேன்).

நன்றி சே.குமார்.

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்ல அருமையான தாம்பத்திய கவிதை. இதில் வேண்டாம் என்றால் வேண்டும் என்றுதானே அர்த்தம். நல்ல கவிதை.

அது சரி போட்டோ எப்ப எடுத்தீர்கள். நீங்க காஷ்மீர் தீவிரவாதிகளை கேப்டன் விசயகாந்துடன் வேட்டையாட போனதை படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நன்றி.

உண்மைத்தமிழன் said...

ம்.. நன்றாக இருக்கிறது கவிதை..!

"இலக்கியன்" என்கிற பெயரை வைத்துக் கொண்டு இது கூட எழுதவில்லயெனில் எப்படிங்கண்ணா..?

☼ வெயிலான் said...

என்ன ஆச்சு????

padmanabhan said...

nandru

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தனின் வாக்கு.

நன்றி உண்மைத்தமிழன் அண்ணாச்சி.

நன்றி வெயிலான் (ஏன்?).

நன்றி பத்மநாபன்.

சத்ரியன் said...

ம்ம்ம்ம்.... என்ன நண்பா,

கடையில சரக்கு போட்டு ரொம்ப நாளாச்சி போல....!

கவிதை அருமை.

நாடோடி இலக்கியன் said...

வாங்க சத்ரியன்,

கருத்துக்கு மிக்க நன்றி.
விரைவில் புது இடுகையோடு வருகிறேன்.

பத்மா said...

nallaarukku

நாடோடி இலக்கியன் said...

நன்றி பத்மா.