Tuesday, October 13, 2009

கிறுக்கல்கள் 2

ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எதிர் இருக்கை இளமை,
வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விவகாரமாய் உள்விரியும்
அக்காட்சியின் நீட்சிகள்..!

சூழ்நிலையின் தீர்மானங்கள்
நல்லவன்
அயோக்கியன்
குணவான்
முன்கோபி
நண்பன்
துரோகி
அறிவாளி
முட்டாள்
தெய்வம்
சாத்தான்
தைரியசாலி
கோழை
முரடன்
சாது
.....
......

எல்லாமே எல்லோருமே..!

14 comments:

பித்தனின் வாக்கு said...

// வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விலகிக்கொண்டே இருக்கிறது
மனத்திரையில் அத்துப்பட்டா..! //
விலகிக்கொண்டே என்பதை வீட உறுத்திகொண்டே இருக்கிறது என்பது பெறுத்தமாக இருக்கும். குணங்களின் கவிதை அழகு.

Kumky said...

அத்துப்பட்டா..!

அத்து போட்டா...?

இது பொருந்திவரலை.
வாழ்த்து
சாபம்

சரி...சரி...
ஏன் இந்தாள்கிட்டபழகுனோம்னு தோன்றது உங்களுக்கு மட்டுமில்லைன்னு ஆறுதல் பட்டுக்குங்க....

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தன்,(மொத்தமாகவே மாற்றிவிட்டேன் நண்பரே,இருப்பினும் இன்னும் கூட வேறு மாதிரி மாற்றலாம் என்கிற எண்ணம் இருக்கிறது).

நன்றி அத்திரிம்(பின்னூட்டியதற்குப் பிறகு கொஞ்சம் மாற்றிவிட்டேன் நண்பா. இந்த சூப்பரை நான் எடுத்துக்கலாமா?).

நன்றி கும்க்கி,( :) )

ஈரோடு கதிர் said...

//அக்காட்சியின் நீட்சிகள்..!//

ஆஹா... என்ன செய்தாலும் சில விநாடியேனும் நீளும் எதார்த்தம் தான்

ஈரோடு கதிர் said...

நானும் நீங்களும் என்ன என்பதை சூழ்நிலை சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது...

ஆனால் சூழ்நிலை மட்டும் என்றும் வல்லவனாகவே....

இரண்டு கவிதைகளும் இழைத்தபின்
வெகு அற்புதம்
(அருமை / அழகு / சூப்பர் / வாவ்)

பித்தனின் வாக்கு said...

இம்ம் இந்த வரிகள் நிறைவாக உள்ளது. நன்றி.

'பரிவை' சே.குமார் said...

எனது நண்பர் மோகனின் வலைக்குடிளில் தங்கள் பின்னுட்டம் பார்த்து கிளிக்கினால் அருமையான கவிதைவரிகள். த்டரட்டும் கவிதை வரிகள்.

நட்புடன்
சே.குமார்

"உழவன்" "Uzhavan" said...

இயல்பான வரிகள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்,(இன்னும் கூட கவிதையாக மாறவில்லை என்றே தோனுகிறது கதிர்).

நன்றி பித்தன்.

நன்றி குமார்.(உங்க நண்பரின் வலைப்பக்கம் என்ன பெயரில் இருக்கிறது நண்பா).

நன்றி உழவன்.

அன்புடன் நான் said...

ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எதிர் இருக்கை இளமை,
வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விவகாரமாய் உள்விரியும்
அக்காட்சியின் நீட்சிகள்..!//

உங்க நேர்மை எனக்கு பிடிசிருக்கு...

ISR Selvakumar said...

எல்லாமே எல்லோருமே..!

நீங்கள் நான் உட்பட..சரிதானே..?

நாடோடி இலக்கியன் said...

நன்றி கருணாக்கரசு.

நன்றி செல்வக்குமார்,(ஆமாங்க எல்லோருக்குள்ளும் எல்லா குணங்களும் இருக்கும். சூழ்நிலை மட்டுமே அவற்றைத் தீர்மானிக்கும் சக்தி மேலும் நீங்க நீங்களாக இருப்பினும் சூழ்நிலை மற்றவர்களின் முன்னால் உங்களை தவறாகவும் காட்டும் என்ற செய்தியையும் அந்த கிறுக்கலில் சொல்ல முயன்றிருக்கிறேன்).

நர்சிம் said...

சூழ்நிலைதான் ..ஆம்..சூழல் மட்டுமே..

எனக்கு மிகப் பிடித்திருந்தது.

முதல் கவிதை..

எதார்த்தம்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்,(ரசித்தேன் எதார்த்தமான பின்னூட்டத்தை).