தூசி படிந்த கிச்சன்,
நிறமிழந்த பாத்ரூம் ஸ்டிக்கர் பொட்டு,
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
பிரிக்கப்படா உணவுப் பொட்டலம்,
டீப்பாயில் முளைத்த நெப்போலியன்,
கையில் புகையும் கிங்ஸ்,
எங்கிருந்தோ கேட்குமொரு சேவலின் கூவல்,
உறக்கம் தொலைத்த விழிகளோடு
மூலையில் சுருண்டுகிடக்கும் அவனை
வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு
வெறும் குடிகாரனாய் தெரியலாம்..!
Wednesday, September 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
கவிதை.... நன்று
இன்னும் தெளியலையோ?
கவிதை நல்லாருக்கு அன்பரே....
நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தியளோ?(எனக்கு தெரியாம)
முதல்ல அந்த பார்சல பிரிங்க
நன்றி கதிர்.
நன்றி பாலாஜி.
நன்றி சிவா,(யோவ் இது குஜால் கவிதையில்லை).
நன்றி கும்க்கி,(எவ்வளோ கவனமாக இருப்பினும் சந்திப்பிழை வந்துவிடுகிறது).
நன்றி அர்விந்த்.
நண்பா சந்திப்பிழையா? சந்திப்பு பிழையா. ஐ மீன் சந்திப்புல நடந்த பிழையா?
//
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
//
வழக்கமா காலெண்டர்'தானே படபடக்கும்..
Excellent my dear friend..
அந்த மென்சோகம் அருமை.. அந்த உணர்வு சிலருக்கு மட்டுமே புரியும் நண்பா.
நிறையப் பொருள் தரும் நல்ல கவிதை எனலாம் நண்பரே...
வசீகரிக்கும் வரிகள்.... நிறைவாய்...ஒரு கருத்து.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
இருக்கு கவிதை நல்லாவே
வாழ்த்துகள் - நல்லாவே
அருமை. கவிதை...
நன்றி முரளி.(அந்த எஃபெக்ட்தான்)
நன்றி சுரேஷ் குமார்.(அதான் கட்டுடைப்பு).
நன்றி ரங்ஸ்.(ஆமா நண்பா)
நன்றி தமிழ்ப்பறவை.
நன்றி ஆரூரன் விசுவநாதன்.
நன்றி சினா சார்.
நன்றி ராகவன் சார்.
கவிதை சூப்பர் நாடோடி இலக்கியன்.
நீங்கள் உள் வாங்கியது நன்றாக வந்திருக்கிறது.
//சந்திப்பிழையிருக்க வாய்ப்பு ஒரே குழப்பமா இருக்குங்க//
இந்த ”வாய்ப்பு”தான் குழப்பமா இருக்கு.
நம்ம கவிதைகளையும் படிச்சு எதன சொல்லுங்க.திருத்திக்க முடியும்.
மூலையில் சுருண்டுகிடக்கும் அவனை
வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு
வெறும் குடிகாரனாய் தெரியலாம்..!
///
குடிகாரன் எல்லாம் முட்டாள் இல்லைதான்!!
நன்றி கே.ரவிஷங்கர்.
நன்றி தேவன் மாயம்.
அருமையான கவிதை.....
குடிகாரனாய் தெரியும் அவன் யார்?
நன்றி புலவன் புலிகேசி.
நன்றி செல்வக்குமார்,(இந்த இடுகையில் வரும் அவன் யாரென முதல் இரண்டு வரிகளில் இருக்கிறது. மேலும் வெளிப் பார்வைக்கு தெரிவதெல்லாம் உண்மையென நம்பி தவறாக புரிந்து ஒருத்தனை நிராகரிப்பது குற்றவுணர்வின்றி சக மனிதன் மேல் செய்யும் வன்முறையாக நான் பார்க்கிறேன் அதற்கு இந்த குடிகாரன் குறியீடாய் பயன்படுத்தி கவிதை போன்று ஒரு முயற்சி அவ்வளவே).
இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்.
visuals உடன் கூடிய நல்ல பாத்திரப் படைப்பைக் கண்டேன்.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அன்பரே.
நன்றி ஷண்முகப்பிரியன் சார்,(உங்க கன்னிகாவைப் பற்றி சிலாகித்து சிறு பதிவிட்டிருந்தேன் சில மாதங்களுக்கு முன்பு ,அதே போன்று ஒருவர் வாழும் ஆலயம் படத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன் அப்படி நான் நேசித்த படைப்புகளுக்குச் சொந்தக்காரரான உங்களிடமிருந்து வந்த இந்த பின்னூட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை).
ஷண்முகப்பிரியன் சார் சொன்னதுபோல், நல்ல பாத்திரப் படைப்பும், காட்சியமைப்புகளும்.
மிக்க நன்றிங்க உழவன்.
Post a Comment