Thursday, May 7, 2009

இரண்டு கவிதைகளும்,ஒரு தத்துவமும்.

மௌனங்களில்...
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்

மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!

ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியம்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!


"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,

நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".

மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).

மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))

17 comments:

ஸ்ரீமதி said...

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் நல்லா இருக்கே மூனுமே :)))

Anonymous said...

கத்திரி வெயில் நாளைக்கு முடியுதாமில்ல.

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி ,
எப்படியும் உங்க பின்னூட்டம் வரும்னு தெரியும் சகோ,குறையே சொல்ல தெரியாதா உங்களுக்கு எப்படி மொக்கை போட்டாலும் நல்லாயிருக்குன்னு சொல்ல உங்க மாதிரி மனசு யாருக்கு வரும். :))

@அனானி,
//கத்திரி வெயில் நாளைக்கு முடியுதாமில்ல//
i really enjoyed ur comment.

முனைவர்.இரா.குணசீலன் said...

மடக்கி மடக்கி எழுதியிருப்பதைப் பார்த்ததுமே இது கவிதையாத் தான் இருக்கனும்னு நினைச்சேன்....

சரவணகார்த்திகேயன் சி. said...

The second one is a nice thing..
Everybody do have experienced it..
I have added it to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/05/38.html

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//"யாரிடமும் சொல்லாதே"//


ஓ. கே.., ஓ.கே...,

நாடோடி இலக்கியன் said...

@முனைவர்.இரா.குணசீலன்,
//கவிதையாத் தான் இருக்கனும்னு நினைச்சேன்....//

ஹி ஹி...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

@சரவணகார்த்திகேயன் சி.,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் உங்க பதிவில் என் பக்கத்திற்கு லிங்க் கொடுத்தமைக்கும் மிக்க நன்றிங்க.

@SUREஷ்,
பரவாயில்ல நண்பா ஒரு நாலுபேருகிட்டதான் சொல்லுங்களேன்.

நன்றி சுரேஷ்.

Kavi kilavan said...

நல்லா இருக்கு

நாடோடி இலக்கியன் said...

@Kavi kilavan
வாங்க கவி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
உங்க பெயர் நல்லாயிருக்குங்க.

ஸ்ரீமதி said...

//நாடோடி இலக்கியன் said...
@ஸ்ரீமதி ,
எப்படியும் உங்க பின்னூட்டம் வரும்னு தெரியும் சகோ,குறையே சொல்ல தெரியாதா உங்களுக்கு எப்படி மொக்கை போட்டாலும் நல்லாயிருக்குன்னு சொல்ல உங்க மாதிரி மனசு யாருக்கு வரும். :))//

முதல் விஷயம்: எனக்கு குறை சொல்ல தெரியாது.. நிஜம் தான் அண்ணா.. :)) ஏன்னா நானே அவ்ளோ ஸ்ட்ரோங் கிடையாது கவிதைல... நான் எப்படி உங்கள குறை சொல்றது?? :))

ரெண்டாவது விஷயம்: நான் ரசிக்கிற விஷயங்களுக்கு எதுக்கு குறை சொல்லணும்??

மூணாவது விஷயம்: நான் எப்பவும் உங்க பதிவுகளுக்கு முதலில் அல்லது ரெண்டாவதா வருவேன்... வந்ததும் நல்லாவே இல்லன்னு சொன்னா உங்களுக்கும் கஷ்டமா இருக்கும் எனக்கும் அது பிடிக்காது அதான்... :)) ஆனா, நிஜமாவே உங்க பதிவு படிச்சிதான் கமெண்ட்டறேன் டெம்ப்ளேட் கமெண்ட் இல்ல.. :)))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி,
மறுகைக்கு நன்றி சகோ.
இந்த பதிவில் இடம் பெற்ற முதல் கவிதை உண்மையிலேயே என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது அதனால் கொஞ்சம் மறைமுகமாகவே எழுதியிருப்பேன்(எனக்கு மட்டுமான கவிதையாக).ஒரு சிலரின் சுயரூபம் வெளியில் தெரிந்தால் அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்ற சில விஷயங்களுக்காக அவர்களின்மேல் இறக்கப்பட்டு நான் மௌனமாக இருக்கின்றேன் அனால் எனது மௌனத்தை தங்களுக்கு சாதமாக்கி அவர்கள் பரப்பும் பொய்செய்திகளில் மனிதம் இருப்பதில்லை என்ற பொருள்படும்படி எழுதியிருந்தேன். இருந்தாலும் அது புலம்பல் வகையில் இருப்பதால் நான் மொக்கை என்று லேபிள் போட்டிருந்தேன். உங்களுக்கான மறுமொழியிலும் அதை மனதில் கொண்டே எழுதியிருந்தேன்.

//ஏன்னா நானே அவ்ளோ ஸ்ட்ரோங் கிடையாது கவிதைல.//

நம்பிட்டேன் சகோ.

//நான் ரசிக்கிற விஷயங்களுக்கு எதுக்கு குறை சொல்லணும்?? //

இது நெத்தியடி.


//வந்ததும் நல்லாவே இல்லன்னு சொன்னா உங்களுக்கும் கஷ்டமா இருக்கும் //
கஷ்டமாவெல்லாம் இருக்காது அதனால பிடிக்கலேன்னா சொல்லிடுங்க இல்லேன்னா எப்படி என்னை திருத்திக் கொள்வது.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" //
ஃபார்வேட் மெசேஜ சொல்றியலோ.

நாடோடி இலக்கியன் said...

//ஃபார்வேட் மெசேஜ சொல்றியலோ.//

:)

குடந்தை அன்புமணி said...

முதல் கவிதை நல்லாயிருக்கு நண்பா! இரண்டாவது...கவிதை மாதிரி இருக்கு. மூணாவது தத்துவமா நம்புறோம்...

த்ஞசாவூர் காரரா நீங்க? நான் கும்பகோணம்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி குடந்தை அன்புமணி(நான் தஞ்சாவூரேதான்,நீங்க கும்பகோணம் என்று சொல்லவே வேண்டாம் நண்பா,பேரிலேயே ஊரை வச்சிருக்கீங்களே)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரகசியங்களின் ரகசியம், யதார்த்தமான ஒன்றுதான்

-ப்ரியமுடன்
சேரல்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சேரல்.