Thursday, December 25, 2008

கவிதைக்கு காதல் வந்தால்......!

யாரும் அறியாமல்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
"லாலிபாப்" வாங்கி சுவைக்கிறாய்,
எதிர்பாரா என் வருகையால்
சிறிது தடுமாறி,
இயல்பாய் முகத்தை வைக்க முயன்று
பிறகு வீட்டை நோக்கி ஓடுகிறாய்
வெட்கத்தை முதுகிலும் பரவவிட்டபடி..!


ஊரில் விளையாட்டு போட்டி,
ஓட்டப் பந்தயத்தில்
முதலாவதாக ஓடிவந்த
உனது அண்ணனை
நான் முந்தியபோது
உன்னையுமறியாமல்
துள்ளிக்குத்தித்து
மற்றவர்கள் முன்
அசடு வழிந்து நின்றாயே
நினைவிருக்கிறதா..!

என் தங்கை வீட்டில் இல்லாத
நேரமாய் பார்த்து,
அவளைப் பார்ப்பதற்கு வந்ததாக
அம்மாவிடம் சொல்லிக்கொண்டே
என்னை பார்த்து குறும்பாய் சிரிக்கிற
உன்னை என்ன செய்யலாம்....!


பொங்கலன்று நடந்த
கலைநிகழ்ச்சியில்

நடனம்,நாடகம்,கவிதையென
பல பிரிவுகளில்
போட்டிவைத்து

யார்யாருக்கோ
பரிசை வழங்கினார்கள்,

நீ நொடிக்கொருதரம்
என்னை பார்த்து

பார்வையாலே வைத்த
ஜூகல்பந்தியை பாராமல்...!

எனது பிறந்தநாளுக்கு
நீ அனுப்பிய
வாழ்த்து அட்டையை
போஸ்ட்மேனான
உனது அப்பா
என்னிடம் கொடுத்தபோதே
எனக்கு அவரை
'மாமா'வாக்கிவிட்டாய்..!(
ஹி ஹி)

5 comments:

பிரியமுடன் பிரபு said...

அழகான வரிகள்

////
எனது பிறந்தநாளுக்கு
நீ அனுப்பிய வாழ்த்து அட்டையை
போஸ்ட்மேனான உனது அப்பா
என்னிடம் கொடுத்தபோதே
எனக்கு அவரை 'மாமா'வாக்கிவிட்டாய்..!(ஹி ஹி)
////

அது ச்சூப்பர்

நாடோடி இலக்கியன் said...

@பிரபு
வாங்க பிரபு,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ஸ்ரீமதி said...

அழகான வரிகள் :)))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி,
ஆளில்லாத கடைக்கு டீ ஆத்தும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வருகைதரும் அன்பு தங்கையின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

அழகான வரிகள்