பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்.....
எதிர்பாரா
என் வருகையால்,
தடுமாறும்
உன் உரையாடலிலும்....
உன் வீட்டை கடக்கையில்
இல்லாத யாரையாவது
உறக்க விளித்து,
உன் இருத்தலை
அறியத் தரும்போதும்...
என் பெயரைக் கொண்ட
ஜவுளிக் கடையின் பையில்
நீ புத்தகம் சுமந்து வரும்போதும்....
உன் பிறந்த நாளில்,
உன் கையாலேயே
எல்லோருக்கும் இனிப்பு வழங்கி,
எனக்கு மட்டும்
தோழியிடம் கொடுத்து ...
வேண்டுமென்றே
என்னைத் தவிர்த்த போதும்...
அறிந்து கொண்டேன்
என் மீதான உன் காதலை..!
Tuesday, July 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அட...தவிர்த்தால் கூடக் காதலா????
அன்புடன் அருணா
Aruna said...
//அட...தவிர்த்தால் கூடக் காதலா????
//
வாருங்கள் அருணா,
தவி(ர்)ப்பதும் காதல் தாங்க...!
வருகைக்கு மிக்க நன்றி....!
ரொம்ப.. நல்லா.. இருக்கு..உங்க கவிஜை...
ரொம்ப.. நல்லா.. இருக்கு.இன்னைக்கு தான் பின்னூட்டமிட நேரம் கிடைத்தது :)
"பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்..... "
இந்த வரிகள் நல்லா இருக்கு. கவிதை நன்று. வாழ்த்துகள்!
மஹாராஜா.க. said...
//ரொம்ப.. நல்லா.. இருக்கு..உங்க கவிஜை...//
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க மஹாராஜா.க.
ஸ்ரீ said...
//ரொம்ப.. நல்லா.. இருக்கு.இன்னைக்கு தான் பின்னூட்டமிட நேரம் கிடைத்தது :)//
வாங்க ஸ்ரீ ,
ரொம்ப நன்றிங்க,இன்னைக்கு தான் நன்றி சொல்ல நேரம் கிடைத்தது :)
ரொம்ப ரொம்ப அழகான கவிதை :)))
சுகமான கணங்கள்...
கண்முன்னே நிறுத்திவிட்டீகள்
அழகு...:))
ஸ்ரீமதி said...
//ரொம்ப ரொம்ப அழகான கவிதை :)))//
வாங்க ஸ்ரீமதி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
ரகசிய சிநேகிதி said...
//"பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்..... "
இந்த வரிகள் நல்லா இருக்கு. கவிதை நன்று. வாழ்த்துகள்//
வாங்க மேஹா,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
நவீன் ப்ரகாஷ் said...
//சுகமான கணங்கள்...
கண்முன்னே நிறுத்திவிட்டீகள்
அழகு...:))//
வாங்க நவீன் ப்ரகாஷ் ,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் விட்ஜெட் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய Add-தமிழ் பட்டன் விட்ஜெட் உங்கள் தளத்தில் இணையுங்கள் !
மேலதிக தகவல்களுக்கு www.findindia.net
நன்றி ராம்.
Post a Comment