Friday, May 30, 2008

காதல் பள்ளி.................!

மைதானத்தில் படர்ந்திருந்த
நெறிஞ்சி முட்செடியை
களைந்து கொண்டிருந்தேன்,
ஆசிரியர் அனைவரும்
என்னை பாராட்டினர்,
நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்
குத்திக்கொண்டது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...!


உணவு இடைவேளையின்போது,
அவசரமாய் திறந்த டிபன்பாக்ஸ்
காலியாக இருந்ததை கண்டதும்
அதெப்படி சரியாக என்னை பார்த்தாய்..?!


கல்யாணத்திற்குப் பிறகும்,
நான் தலைப்பெழுத்தை
மாற்றிக் கொள்ள மாட்டேனென்று
தோழியிடம் கூறிக்கொண்டே
ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கிறாய்;
எனக்குதான் தெரியுமே,
உன் அப்பாவின் பெயருக்கும்
என் பெயருக்கும்
முதலெழுத்து ஒன்றுதானென்பது...!


பள்ளியில் மேஜிக் ஷோ நடத்தினார்கள்
மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரம் சொல்ல
மாயாமாய் மறைந்தது கைக்குட்டை;
நீ மந்திரமெல்லாம் சொல்லவில்லை
சும்மா ஒருமுறை திரும்பித்தான் பார்த்தாய் ...!பள்ளிக் காலத்தில்
என்னால் நடப்பட்டு
உன்னால் நீரூட்டப்பட்ட
அந்த சப்போட்டா கன்றில்
காய்க்கும் பழங்கள் மட்டும்
அவ்வளவு ருசியாக இருப்பதாக
இன்றைய மாணவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்;
இருக்காதா பின்னே
காதல் குடித்து வளர்ந்த மரமாயிற்றே...!


இந்த பதிவில் ரொம்பவே சுமாராகத்தான் கவிதைகள்(?!!) இருக்கும்.நீண்ட நாட்களாக ஒரு பதிவும் இடாததால் நண்பர் ஸ்ரீ அவர்கள் ஒரு பதிவு போடும்படி கேட்டுக்கொண்டமைக்காக அவசரமா தோணிணத கிறுக்கியிருக்கேன்.

(யோசித்து எழுதினா மட்டும், நல்லா எழுதிருவியாக்கும்னு நீங்க நினைக்கிறது புரியுதுங்க...)

16 comments:

Dreamzz said...

//பள்ளிக் காலத்தில்
என்னால் நடப்பட்டு
உன்னால் நீரூட்டப்பட்ட
அந்த சப்போட்டா கன்றில்
காய்க்கும் பழங்கள் மட்டும்
அவ்வளவு ருசியாக இருப்பதாக
இன்றைய மாணவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்;
இருக்காதா பின்னே
காதல் குடித்து வளர்ந்த மரமாயிற்றே...!
//

:) nice

ஸ்ரீ said...

வாங்க இலக்கியன். இவ்ளோ நாளாச்சா பதிவு போட. அதுசரி டிபன் பாக்ஸ் மேட்டர் உண்மை தான ;)

Shwetha Robert said...

Very nice & realistic lines:)

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் Dreamzz ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஸ்ரீ ,

//அதுசரி டிபன் பாக்ஸ் மேட்டர் உண்மை தான //

மத்ததெல்லாம் பொய்யிங்கிறீங்களா?
:)

நாடோடி இலக்கியன் said...

Shwetha Robert said...
//Very nice & realistic lines:)//

வாருங்கள் ஸ்வேதா ராபர்ட் ,

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நித்யகுமாரன் said...

இயல்பு குன்றாமல்
வரிகள் அனைத்தும்
பிரமாதமாய்
வாஞ்சையோடு
சிரிக்கின்றன

பேரன்புடன் நித்யகுமாரன்

நாடோடி இலக்கியன் said...

நித்யகுமாரன் said...

//இயல்பு குன்றாமல்
வரிகள் அனைத்தும்
பிரமாதமாய்
வாஞ்சையோடு
சிரிக்கின்றன
//

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் நித்யன்...
எனக்கே இந்த பதிவு சுவராஸ்யமா தெரியலையே,மனசு நோகக்கூடாதுன்னு பின்னூட்டம் போட்டுருக்கீங்க,உங்க அன்பிற்கு மிக்க நன்றிங்க...!

ஜி said...

arumaia irukku....

vaarthaihalum theme'um arumaiyaa irukkuthu.. sila kavithaihalla atha konjam nalla kaiyaandirukalaamnu thonuthu...

J J Reegan said...

// மைதானத்தில் படர்ந்திருந்த
நெறிஞ்சி முட்செடியை
களைந்து கொண்டிருந்தேன்,
ஆசிரியர் அனைவரும்
என்னை பாராட்டினர்,
நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்
குத்திக்கொண்டது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...! //

ரொம்ப அழகான வரிகள்...

நாடோடி இலக்கியன் said...

ஜி said...
//arumaia irukku....


vaarthaihalum theme'um arumaiyaa irukkuthu..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜி.

//sila kavithaihalla atha konjam nalla kaiyaandirukalaamnu thonuthu...//
ஆமாங்க அவசரமா எழுதினேன்,மாற்றி எழுத முயற்சிக்கிறேங்க...!

நாடோடி இலக்கியன் said...

J J Reegan said...
// மைதானத்தில் படர்ந்திருந்த
நெறிஞ்சி முட்செடியை
களைந்து கொண்டிருந்தேன்,
ஆசிரியர் அனைவரும்
என்னை பாராட்டினர்,
நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்
குத்திக்கொண்டது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...! //

//ரொம்ப அழகான வரிகள்...//

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க ரீகன்.

அனுஜன்யா said...

நீங்கள் கூறிக்கொள்ளும்படி சுமாராக ஒன்றும் இல்லை. நன்றாகவே உள்ளன. மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் அனுஜன்யா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

cheena (சீனா) said...

அவசரமாக - தோன்றியதைன் கிறுக்கல்கள் எனினும் அருமையாக இருந்தது.
முட்செடியை அகற்றும் பொதுநல சேவை ( சுய நலம் ) - காணாமல் போன உணவு - ஒன்றான முதலெழுத்து - பார்த்ததிலேயே காணாமல் போனவன் - காதலினால் வளர்ந்த மரம்

கற்பனை வளம் அருமை

நல்வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

cheena (சீனா) said...
//அவசரமாக - தோன்றியதைன் கிறுக்கல்கள் எனினும் அருமையாக இருந்தது.
முட்செடியை அகற்றும் பொதுநல சேவை ( சுய நலம் ) - காணாமல் போன உணவு - ஒன்றான முதலெழுத்து - பார்த்ததிலேயே காணாமல் போனவன் - காதலினால் வளர்ந்த மரம்

கற்பனை வளம் அருமை

நல்வாழ்த்துகள்//

வாருங்கள் திரு.சீனா,
ரசித்து எழுதிய பின்னூட்டத்திற்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ஐயா.