Friday, February 1, 2008

கலி காலக் காதல்!!

என்னைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாய்,
எனக்குப் புரிந்து போயிற்று
அந்த வார்த்தயை சொல்ல போகிறாயென்று,
பிறிதொரு கணத்தில் சொல்லியும் விட்டாய்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று
மறுத்தேன்,
பிடிவாதமாக இருந்தாய்,
மசிந்தேன்,
பிறகு எங்கெல்லாமோ சுற்றினோம்,
நாட்கள் விரைந்து ஓடியது,
வேறொரு சந்தர்ப்பத்தில்
வெகு இயல்பாய் சொன்னாய்,
"என்னை மறந்துவிடு" என்று,
இதையும் நான் எதிர்பார்த்தேன்
நினைத்தால் தானே மறப்பதற்கு!

2 comments:

Arjun said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே.... நண்பனே..... நண்பனே....

cheena (சீனா) said...

அது சரி

புரிந்து, எதிர் பார்த்து, மறுத்து, பிடிவாதத்திற்குப் பின் மசிந்து, ஊரெல்லாம் சுற்றி, காலத்தினைக் கழித்து, மறக்கச் சொல்லும் பொழுது இயல்பாய் மறந்து ................


பல காதலர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் - ஜஸ்ட் டைம் பாஸ் - என்ன செய்வது ?