Monday, December 3, 2007

மழையில் அவள் மழலையாய் நான்..


அது ஒரு மழைக்காலம்,
மழை நின்ற சிறு இடைவெளியில்
பள்ளி செல்ல ஆயத்தமாய்
வீட்டினின்று வெளியே வருகிறாய்,
உன் வீட்டிற்கும் சாலைக்குமான‌
இடைவெளி நிர‌ம்பிய‌ ம‌ழைநீரில்
கால் படாமல் இருக்க
கற்களை வைத்திருந்தார்கள்,
நீ ,ஒரு கல் விட்டு ஒரு கல்
தாண்டியபடியே வருகிறாய்,
உன் பாதம் படா கற்களின் ஏக்கம்
உனக்குத் தெரியுமா?!

பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு
இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,
எல்லோரும் ஒரே மாதிரியான
சீருடைதான்அணிந்து செல்கிறீர்கள்;
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்..!

ஏதோ நினைத்த‌வ‌ளாய் திடீரென ஓடி,
ஒரு மரத்தின் கீழ் நின்று
அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்,
தோழியரும் ஆர்வமாய் ஓடி வந்து
என்னவென்று வினவியபடியே
அண்ணார்ந்து பார்க்கையில்,
தணிந்திருந்த ஒரு கிளையை
யாரும் அறியாமல் உலுக்குகிறாய்,
இலை தங்கிய மழை நீர்
தோழியரை நனைக்க,
அவர்கள் பொய் கோபத்தோடு துரத்த
நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை..!

நீ உலுக்கிய கிளையை
எனக்கு நானே உலுக்கி
நனைந்து களித்து
உன்னைத் தொடர்கிறேன்,

அடுத்து எதிர்ப்பட்ட
கால்வாய் மதகடிப் பாலத்தில்
ஒரு புறம் இறங்கி
காகிதக் கப்பலை விட்டு
மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,
மறுபுறம் வெளிவந்தக் கப்பல்
அருகில் இருந்த சுழியில் மாட்டி,
நான் உன்னைச் சுற்றுவது போலவே
சுற்றுவதைப் பார்த்து,
ஆனந்தப்பட்டு துள்ளிக் குதிக்கிறாய்,

பள்ளியை நெருங்கிய சமயத்தில்
மீண்டும் தூறல் விழத்தொடங்க
எல்லோரும் அவசரமாய்
குடை விரிக்கையில்,
நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
க்கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை....!

27 comments:

Arjun said...

சூப்பர்
- அர்ஜுன்

karthi said...

dai machan

super da....

Divya said...

அசத்தல் கவிதை.......திகட்டவேயில்லை, ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்!

கண்முன் காட்ச்சியாக கொண்டுவந்தன முத்தான் வார்த்தைகள்!

அருமையானதொரு படைப்பு, பாராட்டுக்கள்!

\\எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்
அணிந்து செல்கிறீர்கள்
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,\

சூப்பர் !!!

subrarajan said...

நாகராசன்,

மிக அற்புதம்

cheena (சீனா) said...

காதலியைப் பற்றிய காதல் கவிதை - எளிமையாக அழகாக ஆதங்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வாழ்த்துகள்.

//உன் பாதம் படாத கற்களின்
ஏக்கம் உனக்குத் தெரியுமா?!//

//நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை!!//

//நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்து எனக்குக்
குடையேப் பிடிக்கவில்லை!!!//

நான் ரசித்த வரிகள்

குடையேப் பிடிக்கவில்லை - "ப்" வருமா

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் cheena (சீனா),
முதல் வருகைக்கும் ,பிழை திருத்தியமைக்கும் மிக்க நன்றி.

அருட்பெருங்கோ said...

/ அடுத்து எதிர்ப் பட்ட
கால்வாய் மதகடிப் பாலத்தில்
ஒரு புறம் இறங்கி
காகிதக் கப்பலை விட்டு
மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,/

அழகான அனுபவம் இது. நாம் அனுபவிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்.
மனதுக்குப் பிடித்தவள் அனுபவிப்பதைக் காண்பதற்கு சொல்லவா வேண்டும்???

நாடோடி இலக்கியன் said...

அர்ஜுன்,கார்த்தி,திவ்யா,நாகராசன் மற்றும் அருட்பெருங்கோ ஆகியோரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

Parthiban said...

Super Pari...I konw its late..Sorry

Parthiban

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பார்த்தி.

நாடோடி இலக்கியன் said...

dear paarthiban,
thank you for ur comment.
why did u ask sorry.

Shahul Hameed said...

/ மிக அருமையான கவிதை...தொடரட்டும் உமது கவி பயனம்.../

நாடோடி இலக்கியன் said...

முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி சாகுல்...!

cheena (சீனா) said...

aakaa அருமையான கவிதை - வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன் - இங்கு வந்து பார்த்தால் சென்ற ஜனவரியிலேயே வந்திருக்கிறேன். ஏனோ தொடரவில்லை - இனித் தொடருவோம்.

நாடோடி இலக்கியன் said...

vaanga cheena sir,
welcome & thanks for ur arrival and comments.

நட்புடன் ஜமால் said...

\\உன் பாதம் படாத கற்களின்;
ஏக்கம் உனக்குத் தெரியுமா?!\\

அருமை.

krishnasekar said...

எந்தப் பெண்ணை நினைத்து இதைப் படைத்தீர்களோ? கவிதை அருமை!
நீங்கள் ரசித்த அளவுக்கு அவள் இதை ரசிப்பாள் என்கிறீர்கள்?

பெண்கள் வாழ்க்கையை ரசிக்கையில் நாம் அவர்களை, அவர்களின் ரசிப்பை ரசித்து வீணாய்ப் போகிறோமோ?
-கிருஷ்ணாசேகர்

நட்புடன் ஜமால் said...

\பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு
இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,
எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்
அணிந்து செல்கிறீர்கள்;
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,\\

அதுதான் அதுதான் - அதேதான்.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் ...

நட்புடன் ஜமால் said...

\\நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை!!\\

கலக்கல் ...

நட்புடன் ஜமால் said...

\\பள்ளியை நெருங்கிய சமயத்தில்
மீண்டும் தூரல் விழத்தொடங்க
எல்லோரும் அவசரமாய் குடை விரிக்கையில்,
நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை!!!\\

எங்களுகெல்லாம் உங்கள் கவிதை பிடித்துவிட்டது

உங்க காதலும் தான்.

நாடோடி இலக்கியன் said...

@அதிரை ஜமால்.
வாங்க அதிரை ஜமால்,
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,இந்த கவிதையை அவ்வளவு ரசித்து எழுதினேன்,அதைவிட நீங்க ரசித்து எழுதிய பின்னூட்டம் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

கிருஷ்ணாசேகர்,
//நீங்கள் ரசித்த அளவுக்கு அவள் இதை ரசிப்பாள் என்கிறீர்கள்?//

வாங்க கிருஷ்ணசேகர்,
சின்ன வயதில் மழையில் நனைவது,காகித கப்பல் விடுவது,மரக் கிளையை உலுக்குவது இப்படி எல்லாமே எல்லாருமே செய்திருப்போம்,ஆனால் வளர்ந்துவிட்ட பிறகு அதையெல்லாம் செய்ய ஆசையிருந்தாலும் முடிவதில்லை, காரணம் வயது. அதனால சின்ன வயதில் நான் என்னென்ன செய்தேனோ அதையே என்னுடைய காதிலியின் செயலாக உருவகப் படுத்திக் கொண்டேன் அவ்வளவே.இப்போ உங்க கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.

//பெண்கள் வாழ்க்கையை ரசிக்கையில் நாம் அவர்களை, அவர்களின் ரசிப்பை ரசித்து வீணாய்ப் போகிறோமோ?//

ஒரு பெண்ணின் சின்ன சின்ன குறும்புகளை அவ்வளவு ரசிக்கும் ஒருவன் கண்டிப்பாக வாழ்க்கையையும் ரசித்து வாழ்பனாகத்தான் இருப்பான்.ஆமா பொண்ணுங்கள ரசிக்காம என்னங்க வாழ்க்கையிருக்கிறது. :)

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Anonymous said...

பாரி,

நல்ல அனுபவத் துணுக்குகள் கவிதையாக. எதிலொன்றிலாவது நாம் ஈடுபட்டிருப்போம் அல்லது சிலர் எல்லாவற்ரிலும். எப்படியாகினும் நல்ல கவிதை அள்ளித்தந்த பாரி வள்ளல் வாழ்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை....!
//

இது அதுதான்

நாடோடி இலக்கியன் said...

நன்றி அண்ணாச்சி,
நன்றி சுரேஷ்.

சிவக்குமரன் said...

கொஞ்ச நாளாய் ஒரே .............கவிதையாய் வந்திட்டிருக்கு. ஒரு வேளை.................?

ஆனாலும் ரொம்ப நல்லா அனுபவிச்சி எழுதிஇருக்கீங்க.

அண்ணாச்சிக்கு ஒரு repeetttu!!!!

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவா.