ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள்
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்
விரகத்தில் தவித்த உதடுகளையும்
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கயில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர
விட்ட இடத்திலிருந்துக்
கனவைத் தொடர முயற்சித்தேன்
முடியவில்லை
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Nice Blog :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி teri!!!
நல்ல கனவு!
வருகைக்கு நன்றி பாரி,(உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு,என்னவென்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்)
நன்றாக உள்ளது. முடிவு நச்சென உள்ளது. வாழ்த்துக்கள்.
கருத்துக்கு நன்றி இமயகுமார்,தொடர்ந்து வாருங்கள்!!!
கணினிப் பொறியாளனின் கனவிற்குக் கடவுச்சொல் .....ம்ம்ம் அருமையான கற்பனை.
சென்னிற = செண்ணிற
இன்னுமாப் புரியவில்லை = இன்னுமா புரியவில்லை
காமம் வழிந்த கண்கள் - விரகத்தில் துடித்த உதடுகள் - தாவி அணைக்கையில் கைபேசி அலறல் - பாவம் மென்பொருளாளன்
காதல் கவிதைகள் அருமை
நல்வாழ்த்துகள்
Post a Comment