Saturday, August 25, 2007

காதல் ஊர்வலம்!!!

காகத்திற்கு
உணவு வைப்பத்தாய்க் கூறி
"கா..கா.கா...கா" என
விளித்துக் கொண்டே
ஓரக் கண்ணால்
என்னைப் பார்த்துச் சிரிப்பாய் ,
என் நிறத்தை வைத்து
நீ கேலி செய்கிறாய்
என்பது தெரிந்தும்
ரசிப்பேன்!!!!
*************************************
என்னைப் பார்க்கும்
போதெல்லாம் நவரசத்திலும்
இல்லாத ஒரு
பாவனை செய்வாய்
அந்த பத்தாவது ரசத்தின்
பெயர் என்ன?!!
***********************************
உன் வீட்டை
கடக்கும் போதெல்லாம்
உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்
ஆனாலும் யாரும் அறியாமல்
சொல்ல வேண்டியதை
சொல்லி விடுகிறாயே
கள்ளி!
எங்கேயடி கற்றாய்
அந்த வித்தையை?!
********************************

"சுற்றுலாவில் நான் ரசித்தவை"
என்ற தலைப்பில்,
கட்டுரை எழுதச் சொன்னார்கள்
பக்கம் பக்கமாக எழுதினேன்
உன் பெயரை மட்டும்!!!!

2 comments:

Divya said...

\\உன் வீட்டை
கடக்கும் போதெல்லாம்
உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்
ஆனாலும் யாரும் அறியாமல்
சொல்ல வேண்டியதை
சொல்லி விடுகிறாயே
கள்ளி!
எங்கேயடிக் கற்றாய்
அந்த வித்தையை?! \\

காதல் பரிபாஷையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

நல்லாயிருக்கு கவிதை!

cheena (சீனா) said...

இளங்காதலர்களின் நிலை அழகாகக் கவிதை வடிவில் வந்திருக்கிறது.

கேலியெனத் தெரிந்தும் ரசிப்பது -
நவரசமும் தெரிந்த காதலனுக்குத் தெரியாத மற்றுமொறு குறும்பு ரசம் -
காதலனுக்கு மட்டும் கூறும், கூட இருப்பவர்கள் அறியாமல், இயல்பாகக் கூறும் வித்தை - கற்பனை அபாரம் - நன்று நன்று