Thursday, August 16, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 2)

அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொன்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது!!

******************************************
உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!
*********************************************

உனக்குப் பிடித்தக்
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல்ப் பார்த்து
பிறகு
வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!

**********************************************
நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா?!!!!!
******************************************
உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும்
இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு!!!
************************************************

6 comments:

Arjun said...

மிக நன்று. பொன் பதிவு காண வழ்த்துக்கள்.

YESBEE said...

very intresting

தஞ்சாவூரான் said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள், தொடருங்கள்...வளருங்கள்!

நாடோடி இலக்கியன் said...

உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்ட Arjun ,தஞ்சாவூரான்
மற்றும் YESBEE ஆகியோருக்கு எனது நன்றி.

Anonymous said...

ada ada ada ..
pinnuringale..
inum valara vaazhthukkal..
'dhaavani'yil ezhuthu pizhai...
thiruthi kollungalen...

anbudan
thozhi

cheena (சீனா) said...

காதலியின் அப்பா தான் சிறந்த கவிஞராம் - என்ன ஒரு அருமையான சிந்தனை. சிறந்த அழகிய கவிதையைப் படைத்தவர் சிறந்த கவிஞர்தானே !

அம்மாவிற்கு ஐஸ் வைப்பது - திருமணம் எப்பொழுதெனக் கேட்டால் காதலனைப் பார்ப்பது - எறும்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க பூச்சி மருந்து - அவ்வளவு இனிப்பான காதலி

ஆகா ஆகா - காதல் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது

நன்று நன்று