Thursday, October 1, 2009

கிறுக்கல்கள்..

அர்த்தம் புரியாவிட்டாலும்
அழகாய்த்தான் இருக்கின்றன
ஆதர்ஷ கவிஞனின் கவிதையும்
அவளின் சிரிப்பும்..!

***************************
சாலையில் அடிப்பட்ட நாய்மேல்
சகஜமாய் செல்லும் வாகனங்களைப் போல
எதையோப் பார்த்து எதையோக் கேட்டு
எளிதாய் கட்டமைத்து விடுகிறோம்
கொலைச் செயலென்ற பிரஞ்ஞையற்று
அடுத்தவருக்கான பிம்பத்தை...!
******************************

வழக்கமான பேருந்து பயணத்தில்
என்னை ரசிக்கும் அவனின்
இரக்கமற்ற இயல்பான பார்வைக்காகவே
விரும்பியே மறைக்கிறேன் ஊனமான காலை...!

8 comments:

ஈரோடு கதிர் said...

முதல் கவிதை
மிக இயல்பாக,
இதமாக
சுகமாக
இருக்கிறது

வாழ்த்துகள் பாரி

Unknown said...

ரெண்டாவது நல்லா இருக்கு.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ஷண்முகப்ரியன் said...

வழக்கமான பேருந்து பயணத்தில்
என்னை ரசிக்கும் அவனின்
இரக்கமற்ற இயல்பான பார்வைக்காகவே
விரும்பியே மறைக்கிறேன் ஊனமான காலை...! //

அருமை.

சிவக்குமரன் said...

ம்....

Anonymous said...

அடுத்தவருக்கான பிம்பமும், இயல்பான பார்வையும் என் தேர்வுகள். :)

பிரபாகர் said...

முதல் மழைபோல் இது எனது முதல் பின்னூட்டம்.

வாசிக்க ஆரம்பித்த்தவுடன், எல்லா முதல்களுக்கும் ஏற்படும் பரவசம் ஏற்பட... சொல்ல வார்த்தைகளில்லை நண்பரே.

வரிக்கு வரி என்னை கவர எப்படி பாராட்ட. புகழ்ச்சிக்காய் இல்லை, உண்மையை சொல்கிறேன்...

அருமை நண்பரே.

பிரபாகர்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்,(2ம் 3ம் தேறவில்லை என்று சொல்வது விளங்குகிறது).

நன்றி ரவிஷங்கர்,(உங்களுக்கு 1ம்,3ம் சரியில்லையா சரி செய்துகொள்கிறேன்).

நன்றி அருணா.

நன்றி ஷண்முகப்பிரியன் சார்,(உங்களுக்கு 1ம்,2ம் பிடிக்கலையா, ஓகே கவனத்தில் கொள்கிறேன்).

நன்றி சிவா.

நன்றி சின்ன அம்மிணி,(உங்களுக்கு 1 மட்டும் பிடிக்கலையா,ஓகே நோட் பண்ணிகிட்டேன்).

நன்றி பிரபாகர்,(நாடோடி இலக்கியன் பக்கம்தான் உங்க முதல் பின்னூட்டம் வருமென்று நினைத்தேன் முதல் மழையில் முதல் பின்னூட்டம் வந்ததில் சந்தோஷமே).