பார்வை படும்
இடத்தில் வளரும்
ஒரு செடியின் அழகு
முதல் பூவைத்
தாங்கும் பொழுது
தெரிவதுபோல ,
பார்த்துப் பழகிய நீ
அழகியானாய்
உன் தாவணியின் முதல்நாளில்......!
இலக்கியத்தில் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்,
அன்னத்திற்கும்,அன்றிலுக்கும்
அவற்றின் இயல்புகளை வைத்து
உருவம் கொடுக்க நினைத்தால் ;
உன் உருவத்திற்கு
இறக்கை முளைக்கிறது.....!
Tuesday, September 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லா இருக்குங்க
ரொம்ப நாள் கழிச்சு புது மாப்பிள்ளை கிட்ட இருந்து அழகான கவிதை இனிமே நிறைய எதிர்ப்பார்க்கிறேனுங்கோ
அருமை. . .
குடுகுடுப்பை said...
//நல்லா இருக்குங்க//
வாங்க குடுகுடுப்பை,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
ஸ்ரீ said...
// அழகான கவிதை இனிமே நிறைய எதிர்ப்பார்க்கிறேனுங்கோ//
வாங்க ஸ்ரீ,
தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன் நண்பா.
வெங்கட்ராமன் said...
//அருமை...//
வாங்க வெங்கட்ராமன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
//இவை மாதிரி கவிதைகள் அல்ல கவிதைகள் மாதிரி...!//
நிஜமாவே கவிதைகள் தான்... :)))ரொம்ப நல்லாருக்கு.. :))
//இலக்கியத்தில் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்,
அன்னத்திற்கும்,அன்றிலுக்கும்
அவற்றின் இயல்புகளை வைத்து
உருவம் கொடுக்க நினைத்தால் ;
உன் உருவத்திற்கு
இறக்கை முளைக்கிறது.....! //
வாசிக்கும் பொழுது
மனதுக்கும் இறக்கை
முளைக்கிறது...
அருமை ... :)))
ஸ்ரீமதி said...
//இவை மாதிரி கவிதைகள் அல்ல கவிதைகள் மாதிரி...!//
நிஜமாவே கவிதைகள் தான்... :)))ரொம்ப நல்லாருக்கு.. :))//
வாங்க ஸ்ரீமதி,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
நவீன் ப்ரகாஷ் said...
//வாசிக்கும் பொழுது
மனதுக்கும் இறக்கை
முளைக்கிறது...
அருமை ... :)))//
வாருங்கள் நவீன் பிரகாஷ்,
ரசித்து எழுதிய அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே...!
Post a Comment