Monday, December 10, 2007

சங்கு சுட்டாலும்...... !!

அரைமணி நேரமா நின்னுகிட்டு இருக்கேன்,எப்போ பாரு நாம வர்றப்போ மட்டுதான் இந்த பஸ் நேரத்துக்கு வராம இம்சையை கொடுக்கும், உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது,வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே பஸ் வருதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரோ சட்டையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்துத் திரும்பினேன்.

"அய்யா... தர்மம் பண்ணுங்க சாமி.."-தட்டை ஏந்தியபடி பிச்சையெடுக்கும் கிழவி.

"ஏய் சில்லறை இல்ல போ அங்கிட்டு" என்று என் காத்திருத்தலின் எரிச்சலை அவளிடம் காட்டினேன்.

போவேனா என்பது போல் நகராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள் கிழவி.

"இருக்கிற எரிச்சலில் இது வேற" முணுமுணுத்தபடியே சட்டைப் பையில் இருந்த நூறு ரூபாய்,ஐம்பது ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பையைத் துழாவினேன் இருந்த சில்லறைக் காசில் தேடிப் பிடித்து ஒரு ஐம்பது காசை எடுத்துத் தட்டில் போட்டேன்,

ஒரு பெரிய கும்பிடுப் போட்டு கிழவி நகர்ந்தாள்,

திடீரெனெ நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு எதிரே கல்லூரி மாணவர்களும்,ஆசிரியர்கள் சிலரும் ஒன்று கூடினர்,அவர்களின் கையில் வெள்ள நிவாரண நிதி என்று எழுதிய கைத்தட்டியை வைத்திருந்தனர்.

ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளையும், அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் அல்லல்களையும் உருக்கமாக எடுத்துக்கூறி, இறுதியாக "எங்கள் மாணவர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வருவார்கள் தாங்கள்,தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் நாலாப் பக்கமும் உண்டியலை ஏந்திச் சென்று கொண்டிருந்தனர், நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கும் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

"இவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல" என்று நினைத்தபடியே பஸ் வருதாவெனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எங்க ஊர் பஸ்ஸைத் தவிர மற்ற அனைத்துப் பஸ்ஸும் வந்து போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் உண்டியல் ஏந்திய மாணவன் என்னை மிக நெருங்கிவிட்டான், என்னிடம் வருவதற்குள் பஸ் வந்து விட வேண்டுமென்று படபடப்போடு நான்.

"சனிய புடிச்ச வண்டி" இன்னும் வரல,

மாணவன் என்னை நெருங்க நெருங்க, முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன்,அப்படியே என்னிடம் கேட்டாலும் "இல்லையென சொல்லிட வேண்டியதுதான் " என நினைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

"தம்பி" என யாரோ கூப்பிடுவதைப் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்,சற்று முன் என்னிடம் பிச்சை கேட்ட கிழவி,அந்த மாணவனைக் கூப்பிட்டு தன் தட்டில் உள்ள சில்லறையெல்லாம் அந்த உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தாள்".

"யாரோ என் முகத்தில் காரி உமிழ்ந்தது போல் இருந்தது!".


(சர்வேசனின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை,இது எனது முதல் முயற்சி,குறையிருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்,திருத்திக் கொள்கிறேன்.)

39 comments:

துளசி கோபால் said...

கதை நல்லா இருக்கு.

உங்க பதிவு கருப்புப் பின்னணி கண்ணுக்கு அயர்வைத் தருது.
படிக்கக் கஷ்டமா இருக்கு

நாடோடி இலக்கியன் said...

துளசி கோபால்,
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !!
(கருப்புப் பிண்ணனியை மாற்றிவிட்டேன் சகோதரி!!!)

Sunny said...

Nice Twist, which I didn't expect. Keep writing...

நிமல்-NiMaL said...

சிறப்பாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கு நன்றி திரு.சன்னி,

//Nice Twist, which I didn't expect. Keep writing...//

கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்.





//சிறப்பாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.நிமல்

பாச மலர் said...

மிகவும் நல்ல கதை...நடைமுறையில் அநேகர் இதைத்தானே செய்கிறோம்..வாழ்த்துகள்

மாதங்கி said...

பேருந்து வறுகிறதா,

று வை ரு வாக சரிசெய்து விடுங்கள்

நாடோடி இலக்கியன் said...

பாச மலர்,

//மிகவும் நல்ல கதை.....வாழ்த்துகள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!!!

//நடைமுறையில் அநேகர் இதைத்தானே செய்கிறோம் //

ஆம் நீங்கள் சொல்வது மிகவும் சரி,மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு அகராதியைப் புரட்டும் காலம் வந்துவிடும் போலிருக்கு,


வாருங்கள் மாதங்கி!!!

//மாதங்கி said...
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் நாடோடி இலக்கியன்

'))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி,

பேருந்து வறுகிறதா,

று வை ரு வாக சரிசெய்து விடுங்கள்
//

பிழைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி!

Bee'morgan said...

nice one.. :-) vazhthukal..

SurveySan said...

நல்ல திருப்பம்..

மங்களூர் சிவா said...

கலக்கல் கதை தலை!!

புரட்சித் தமிழன் said...

நாடோடி இலக்கியன் நல்லா கலக்கியிருக்கிங்க வெற்றிபெற வாழ்த்துக்கள்

நக்கீரன் said...

நச்னு இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.

மங்களூர் சிவா said...

//
நாடோடி இலக்கியன் said...
மிகச் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் பாரி.நல்ல பதிவுகளைத் தரும் சில நண்பர்கள் கூட தல என்று மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடும்போது கூறியிருக்கிறார்கள்,அவர்களிடம் எப்படி சுட்டிக் காட்டுவது என்று நினைத்திருந்தேன்,நேரம் பார்த்து உங்கள் பதிவு.

//
நான் அந்த பதிவு உங்கள் பதில் பின்னூட்டத்தால் படிக்க நேர்ந்தது.

ங்கொய்யாலே சூப்பர் எனும் பின்னூட்டத்தை விட
நான் போட்ட
"கலக்கல் கதை தலை!!" தரம் தாழ்ந்த்துவிடவில்லை.

எல்லாம் அவன் அவன் மனசுலதான் இருக்கு.

நாடோடி இலக்கியன் said...

மங்களூர் சிவா,
உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே!!!
என்னுடைய பின்னூட்டம் உங்களை எந்த வகையிலாவது சங்கடப் படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

புரட்சி தமிழன்,
//நாடோடி இலக்கியன் நல்லா கலக்கியிருக்கிங்க வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
நண்பரே!.


நக்கீரன்,

//நச்னு இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்//

வருகைக்கு நன்றி நண்பரே!.
கண்டிப்பாகத் தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

bee'morgan,
//nice one.. :-) vazhthukal..

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி bee'morgan!!

சர்வேசன்,

//நல்ல திருப்பம்..

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே !!

Divya said...

நல்ல திருப்பம்,
சிந்திக்கவும் வைத்தது,
அருமையான முயற்ச்சி!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

தஞ்சாவூரான் said...

அட, சுருக்கமா ... நச்சுன்னு இருக்கு!

தொடர்ந்து எழுதுங்க...

நாடோடி இலக்கியன் said...

// Divya said...
நல்ல திருப்பம்,
சிந்திக்கவும் வைத்தது,
அருமையான முயற்ச்சி!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
//

வாங்க திவ்யா, வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!

//சிந்திக்கவும் வைத்தது, //

இந்த கதையை எழுதுமுன் கதைக்குள் ஒரு செய்தியும் இருக்கணும்,அதே வேளையில் சுருக்கமாக "நச்"சுன்னு இருக்கணும்னு நினைத்துதான் எழுதினேன்.

நாடோடி இலக்கியன் said...

தஞ்சாவூரான் said...
//அட, சுருக்கமா ... நச்சுன்னு இருக்கு!
தொடர்ந்து எழுதுங்க...//
வாங்க தஞ்சாவூரான்,
பாராட்டுக்கு நன்றி!
கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்,நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

polilan said...

Arumai arumai sinthanigal chirakatikkatum
padikkum makkaklidam poi seratum

அரை பிளேடு said...

நல்ல கதை :)

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை.
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை.

கண்மணி said...

நச் மட்டுமல்ல சத்தான கருத்தும் இருக்கு.

நாடோடி இலக்கியன் said...

polilan said...
//Arumai arumai sinthanigal chirakatikkatum
padikkum makkaklidam poi seratum
//

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி polilan .

அரை பிளேடு said...

//நல்ல கதை :)

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை.
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை.
//
வாங்க அரை பிளேடு!

வருகைக்கு நன்றி.

கண்மணி said...
//நச் மட்டுமல்ல சத்தான கருத்தும் இருக்கு.//

வாங்க கண்மணி!

//சத்தான கருத்தும் இருக்கு//

மிக்க நன்றி!

வீ. எம் said...

அருமையான , அர்த்தம் பொதிந்த கதை நாடோடி இலக்கியன் அவர்களே, முதல் முயற்சியே சூப்பர்..

Group A வில் அரசியல்வாதி படித்தீர்களா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எனது முதல் முயற்சி,குறையிருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்,//

முதல் முயற்சியா? நம்பவே முடியவில்லை. மிகவும் நிறப்பாக இருக்கிறது இந்த கதை. :-)

நாடோடி இலக்கியன் said...

வீ. எம் said...
//அருமையான , அர்த்தம் பொதிந்த கதை நாடோடி இலக்கியன் அவர்களே, முதல் முயற்சியே சூப்பர்..

Group A வில் அரசியல்வாதி படித்தீர்களா?//

வாங்க வீ. எம் ,
பாராட்டுக்கு மிக்க நன்றி ,
உங்கள் அரசியல்வாதி சிறுகதை படித்தேன்,நன்றாக இருந்தது,
உங்கள் சிறுகதை இறுதிப் போட்டிக்கு தேர்வானதிற்கு வாழ்த்துக்கள்!!

.:: மை ஃபிரண்ட் ::. said...
//முதல் முயற்சியா? நம்பவே முடியவில்லை. மிகவும் நிறப்பாக இருக்கிறது இந்த கதை. :-)//

வாங்க .:: மை ஃபிரண்ட்,
பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

PRINCENRSAMA said...

வாழ்த்துகள்! சிறப்பாக இருக்கிறது. தொடரட்டும் முயற்சி!

கோபிநாத் said...

அட்டாகாசமான கதை நாடோடி....வாழ்த்துக்கள் ;)))

aaa said...

கதையில் முடிவு கதையின் பாதியிலேய தெரிந்து விட்டது. சுவாரஸ்யம் குறைவுதான்...ஆனால் கருத்து அருமை

SurveySan said...

டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view results

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் PRINCENRSAMA,கோபிநாத் மற்றும் நாஞ்சில் பிரதாப், அனைவருக்கும் எனது நன்றிகள்!!!!

நாடோடி இலக்கியன் said...

SurveySan said...
//டாப்-8க்கு வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சர்வேசன்!

cheena (சீனா) said...

கதை அரூமை. திருப்பம் மிக மிக அருமை. நான் கிழவி 50 பைசாவைப் போடுவார் என எதிர்பார்த்தேன். அவரிடம் உள்ள சில்லறை முழுவதும் போடுவாரென எதிர் பார்க்கவில்லை. பாராட்டுகள்

//பிழைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி!//

பின்னூட்டத்தில் ஒரு சிறு பிழை. "த்" வராது.

ram said...

good try,

final touch is too good



ram kumar

cheena (சீனா) said...

இன்று நான் பார்த்த பதிவுகளிலேயே அதிக மறுமொழி பெற்ற பதிவு இது. என்னுடையது உட்பட - பதிவுலக நண்பர்கள் - துளசி, பாசமலர், சிவா, சர்வேசன், திவ்யா, .::மைஃபிரண்ட்::.
- இவர்களின் கருத்துகள்

ஆகா அருமையான கதை

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு. முதல் கதைன்னு சொல்லவே முடியாது. அருமை.

நாடோடி இலக்கியன் said...

@விக்னேஷ்வரி,
ரொம்ப நன்றிங்க.
எபோதோ எழுதின கதையை இப்போ படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கீங்க. மிகவும் சந்தோஷமா இருக்குங்க.