நிலவே!
நீ முழுதாய்த் தெரிந்தால்
காதலியின் முகத்துக்கும்,
பாதியாய்த் தெரிந்தால் இதழுக்கும்,
அதிலும் குறைந்தால்
புருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள்,
உனக்குப் புகழ்ச்சியே
பிடிக்காது போலும்
அதனால்தான்
முகம் காட்ட மறுக்கிறாயோ....!
என்ன குற்றம் செய்தாளென்று
தலைமறைவாகிப் போனாள்
நிலாப் பெண்....!
வானத்தில் ஹோலி
யார் வீசியது கருப்புச் சாயத்தை
நிலாப் பெண்மீது...!
எந்த காதலனோடு
இரவோடு இரவாக
ஓடிப் போனாள்
நிலாப் பெண்.....!
ஏய் நிலவே!
நீ இருந்தாலும்
இவ்வளவு கல்நெஞ்சக் காரியா?
உன்னை காட்டித்தானே
என் குழந்தைக்கு சோறூட்டுவேன்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
எங்கே போனாய்?!
நீ இருந்தாலும்
இவ்வளவு கல்நெஞ்சக் காரியா?
உன்னை காட்டித்தானே
என் குழந்தைக்கு சோறூட்டுவேன்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
எங்கே போனாய்?!
பகலெல்லாம் என் காதலன்
கொடுத்த வெளிச்சத்தில்
எதைச் சாதித்தீர்கள்
என்றெண்ணித் தானோ என்னவோ
சும்மாவே இருந்து விட்டாய்....!
கொடுத்த வெளிச்சத்தில்
எதைச் சாதித்தீர்கள்
என்றெண்ணித் தானோ என்னவோ
சும்மாவே இருந்து விட்டாய்....!
நீ, நல்ல பெண்தான்,
ஆனாலும் சமயங்களில்
பகலிலும் தெரிவாய்,
இப்படி நேரம் கெட்ட நேரத்தில்
வெளியே வரலாமா?-ஒரு வேளை
உன் சூரியக் காதலனை
உளவு பார்க்க வந்து,
அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி
பொசுங்கி போயிருப்பாயோ.....!
ஆனாலும் சமயங்களில்
பகலிலும் தெரிவாய்,
இப்படி நேரம் கெட்ட நேரத்தில்
வெளியே வரலாமா?-ஒரு வேளை
உன் சூரியக் காதலனை
உளவு பார்க்க வந்து,
அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி
பொசுங்கி போயிருப்பாயோ.....!
ஏய் நிலவே!
எனக்கு உதவி செய்ய
மறைந்து கொண்டாயா?-இல்லை
என் தொழிலைக் காணச் சகிக்காமல்
முகம் மூடிக் கொண்டாயா
புரியாமல்த் தவித்தது
திருட்டுப் பய மனசு...!
எனக்கு உதவி செய்ய
மறைந்து கொண்டாயா?-இல்லை
என் தொழிலைக் காணச் சகிக்காமல்
முகம் மூடிக் கொண்டாயா
புரியாமல்த் தவித்தது
திருட்டுப் பய மனசு...!
ஆம், இன்று அமாவாசை....!
5 comments:
அம்மாவாசை அன்று காணாமற்போன நிலவைப் பற்ற்றி எத்தனை விதமான சிந்தனைகள்.
//நீ, நல்லப் பெண்தான்,//
நல்ல பெண்ணா - நல்லப் பெண்ணா
வருகைக்கும் பிழை சுட்டியமைக்கும் மிக்க நன்றி திரு. சீனா,
இனிவரும் பதிவுகளில் கவனமாக இருக்கிறேன்.
ஏற்கனவே வந்து விட்டேன் போல இருக்கிறது
’நிலாே வா நில்லாமல் வா”
தலைவர் பாட்ட ோடுங்க நிலா வரும்.
நன்றி ரவிஷங்கர்,(ஸ்கூல் டேஸ்ல எழுதினது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் கண்டுக்காதீங்க)
Post a Comment